Sunday, November 9, 2008
திக்ரின் சிறப்புகள்..
புஹாரி : 3293 அபூ ஹுரைரா (ரலி).
1725. 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஏன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6405 அபூஹுரைரா (ரலி).
1726. லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூல்முல்க்கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்).
புஹாரி : 6404 அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி).
1727. இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6406 அபூஹூரைரா (ரலி).
வீரம் குடிகொண்ட நெஞ்சம்
முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போர் அது!அகழ்ப் போர் அதாவது அஹ்ஸாப் போர் என்று அதற்குப் பெயர்.ஆண்கள் எல்லாம் போர்க்களத்திற்கு சென்றுவிட்டார்கள்.பெண்களையும் குழந்தைகளையும் போருக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது அல்லவா?எனவே அவர்களை எல்லாம் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள்.ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழியல்லாஹூ அன்ஹூ) என்று வயதான ஒரு ஸஹாபி அவரைக் காவலுக்கு வைத்திருந்தார்கள்.உள்ளே பெண்களில் ஸஃபிய்யா என்ற ஒரு ஸஹாபிய்யா இருந்தார்கள்.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்களுடைய அத்தை! மிகவும் வீரமுள்ள பெண்!!அன்றைக்கும் சரி, இன்iறைக்கும் மிகப் பெரிய எதிரிகள் யார் என்றால் யூதர்கள் தாம்!!யூதன் ஒருவன் பெண்களும் குழந்தைகளும் எங்கே தங்கவைக்கப் பட்டுள்ளார்கள். என்பதைப் பார்ப்பதற்காக மதீனா வீதிகளில் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தான்.பாதுகாப்பு குறைவாக இருந்தால் பெண்களைத் தாக்கலாம் என்பது யூதர்களின் திட்டம்!இஸ்லாமிய எதிரிகள் எப்போதும் ஆதரவு அற்ற பெண்களையும் குழந்தைகளையும் மட்டுமே தாக்குகிறார்கள்.
எப்படியோ ஒருவழியாக பெண்கள் இருக்கும் இடத்தை அவன் கண்டுபிடித்துவிட்டான்.அந்த வீட்டை அவன் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தான்.யாரோ ஒருவன் உளவு பார்க்க வந்துள்ளான் என்பது ஸஃபிய்யா அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.அவர்கள் காவல் காத்துக் கொண்டிருந்த ஹஸ்ஸானை எச்சரித்தார்கள்.யாரோ ஒருவன் வெளியே நின்று கொண்டுள்ளான். என்ன ஏது என்று பார்த்து எதிரிதான் என்றால் தீர்த்துக் கட்டிவிடுங்கள்!!----என்று கூறினார்கள். ஹஸ்ஸான் வெளியே போய்ப் பார்த்தார். யாரையும் காணவில்லை. திரும்பி வந்துவிட்டார்.மீண்டும் யாரோ நடமாடுவது போல சத்தம் கேட்டது.மறுபடியும் ஸஃபிய்யா ரழியல்லாஹூ அன்ஹா ஹஸ்ஸான் அவர்களை எச்சரித்தார்கள்.ஹஸ்ஸான் மறுபடியும் வெளியே யாரையும் பார்க்காமல் திரும்பி வந்துவிட்டார்.ஸஃபிய்யா அவர்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை.உண்மையிலேயே எதிரி எவனாவது வந்திருந்தால் என்ன ஆகும்? என்று பயந்தார்கள்.பெண்களுக்கு ஆபத்து வந்துவிடுமே என்று யோசித்தார்கள்.
கடைசியாக தாமே சென்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்கள்.ஹஸ்ஸானுக்குத் தெரியாமல் வெளியே சென்று விட்டார்கள்.அங்கே போய்ப் பார்த்தால் ஓர் இடத்தில் யூதன் ஒருவன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.வாளை ஓங்கிக் கொண்டு அவனை நோக்கி ஸஃபிய்யா பாய்ந்தார்கள்.ஒரே வெட்டு! அவன் கதை முடிந்தது.எதிரி ஒழிந்தான். நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள் ஸஃபிய்யா!அமைதியாக உள்ளே திரும்பினார்கள்.ஹஸ்ஸான் அவர்களே! வெளியே எதிரி செத்துக் கிடக்கிறான்.போய் அவனுடைய உடலை அகற்றி விடுங்கள்!---என்று கூறினார்கள்.அங்கே அந்த யூதனை அனுப்பியவர்கள்.அவன் திரும்பி வருவான்: அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.சென்றவன் சென்றவன் தான் திரும்பி வந்தபாடில்லை.ஆஹா! ஏதோ அசம்பாவிதம் ஆகிவிட்டது. சென்றவனைக் காணவில்லை.ஒருவேளை அவனுடைய கதையை முஸ்லிம்கள் முடித்து விட்டார்கள் போலிருக்கின்றது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.பெண்களைப் பாதுகாக்கும் படை ஒன்றும் மதீனா நகரில் இருக்கின்றது. அந்த படையினர் தாம் நாம் அனுப்பியவனைக் கொன்றுவிட்டார் என்று அவர்கள் நம்பிவிட்டார்கள்.இறைநம்பிக்கை-ஈமான் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருந்தால் இறைவனுடைய அச்சம் ஒன்று மட்டும் உள்ளத்தில் வேறூன்றிப் பாய்ந்திருந்தால் ஸஃபிய்யா அவர்களைப் போல நாமும் வீரப் பெண்மணியாக மாறலாம்:இஸ்லாமியப் பணியில் சாதித்துக் காட்டலாம்!அல்லாஹ்வுடைய அன்பை அள்ளிக் கொள்ளலாம்.
உயர்ந்த உள்ளம்
முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்று பலமுறை எதிரிகள் படை எடுத்துவந்தார்கள்.ஸஹாபாக்கள் போருக்காக சென்றுவிடும் போது அப்துல்லாஹ் மதீனாவிலேயே தங்கி இருப்பார்.தற்காலிக தலைமைப் பொறுப்பில் அவரையே இறைத்தூதர்; நியமிப்பார்கள்.ஆனாலும் அவருக்கு மிகவும் கவலையாகவும் ஆதங்கமாகவும் இருக்கும்.ஜிஹாதில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்படுவார்.ஜிஹாதுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே தங்கிவிட்டவர்கள்.முஜாஹிதீன்களை விட மட்டமானவர்கள்: தரத்தில் குறைந்தவர்கள் என்று எல்லாம் அல்குர்ஆன் வசனங்கள் இறங்கும்போது அவருடைய உள்ளம் அப்படியே துடிக்கும்! கண்கள் குளமாகி விடும்!உடல் குறைபாடுகளால், தவிர்க்க முடியாத காரணங்களால் போருக்குப் போகாமல் விட்டவர்கள் மீது குற்றமில்லை என்று அப்துல்லாஹ்வுக்காகவே ஒரு வசனம் இறங்கியது.அப்போதும் அவர் மனம் ஆறவில்லை.முஜாஹிதீனாக மாற முடியவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டே தான் இருந்தார்.உயர்ந்த உள்ளங்கள் சாதாரண செயல்களால் திருப்தி அடைவதே இல்லை.உயர்ந்த உள்ளங்கள் சிகரத்தில் வீற்று இருப்பதையே விரும்புகின்றன!கண் தெரியாவிட்டாலும் பரவாயில்லை: ஜிஹாதில் கலந்துகொண்டே தீருவது என்ற முடிவுக்கு அப்துல்லாஹ் வந்துவிட்டார்.இரண்டாம் கலீஃபா உமருடைய காலத்தில் ஈரான் நாட்டினரோடு சண்டை நடைபெற்றது.இன்று அமெரிக்கா போன்று அன்று ஈரான் ஒரு வல்லரசு.படுபயங்கரமான போர் அது! காதிஸிய்யா போர் என்று அதற்குப் பெயர்.அந்தப் போரில் அப்துல்லாஹ் கலந்து கொண்டார்.இரண்டு அணிகளுக்கு இடையே என்னை நிறுத்திவிடுங்கள்!முஸ்லிம்படையின் கொடியை என்னிடம் கொடுத்துவிடுங்கள்.நான் எங்கும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருப்பேன்!கண் தெரியாத என்னால் எங்குமே நகரமுடியாது!முஸ்லிம்களின் கொடி உயர்ந்தே இருக்கும்!!----என்று அப்துல்லாஹ் கூறினார்.ஜிஹாதுக்கான பெயர்ப் பட்டியலில் தன்னுடைய பெயரையும் கொடுத்தார்.
சஅத் இப்னு அபீ வக்காஸ் என்ற வீர ஸஹாபியின் தலைமையில் படை கிளம்பியது.பெரும் அமர்க்களத்தோடு போர் நடைபெற்றது. இரண்டு நாட்கள் போர் தொடர்ந்தது.இறுதியில் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைத்தது!ஏராளமான ஸஹாபாக்கள் ஷஹீத் ஆனார்கள்!இறந்துபோன ஷூஹதாக்களின் உடல்களிடையே அப்துல்லாஹ்வின் உடலும் கிடந்தது.முஸ்லிம்களின் வெற்றிக்கொடியை ஏந்தியவாறு அப்துல்லாஹ் வீழ்ந்து கிடந்தார்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!இறைவனுடைய வழியில்தான் இறக்க வேண்டும் என்பது நம்முடைய தீராத ஆசையாக இருந்தால் கண்டிப்பாக நம்முடைய இறப்பும் அவ்வாறே அமையும்!உயர்ந்த உள்ளங்கள் சாதாரண மனிதர்கள் பார்க்கும்படி இருப்பதில்லை.அண்ணாந்து பார்க்கும்படி அவைவெகு உயரத்திலேயே காணப்படுகின்றன.
Saturday, November 8, 2008
மனைவி என்றால் ஸாலிஹான மனைவி
உங்களிடம் யாரேனும் ஒருவர் ஒருபொருளைக் கொடுத்து வைத்திருந்து அதைத் தருமாறு கேட்டு வந்தால் என்ன செய்வீர்கள்?அவருடைய பொருளை அவர் கேட்டால் கொடுத்துத்தானே ஆகவேண்டும். உடனே நான் கொடுத்து விடுவேன்! என்றார் அபுதல்ஹா.அப்படியா! அப்படி என்றால் உங்களுக்கு குழந்தையைக் கொடுத்த அல்லாஹ் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டான்! -என்றார் உம்முஸூலைம் ரழியல்லாஹூ அன்ஹா.அபுதல்ஹா அமைதியாக நின்று கொண்டிருந்தார்.ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்? போய் கஃபன், தஃபன் வேலைகளைப் பாருங்கள்!ஒரு நிமிடம் விழிகளை உயர்த்தி அபுதல்ஹா தன்னுடைய மனைவியைப் பார்த்தார்.அதன்பின்பு குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானார்.அதன்பிறகு அண்ணாலாரிடம் சென்று நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கூறினார்.இரவில் ஒன்றாகத் தூங்கினீர்களா? என்று இறைத்தூதர் விசாரித்து.யா அல்லாஹ்! வளமான குழந்தைச் செல்வத்தை இவர்களுக்குக் கொடு!! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.அவ்வாறே ஒரு குழந்தை பிறந்தது.அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்கள்.மிகவும் அறிவுள்ள குழந்தையாக அல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற குழந்தையாக அது வளர்ந்தது.அபு தல்ஹாவுக்குக் கிடைத்த மனைவியும் ஸாலிஹான மனைவி! குழந்தையும் ஸாலியான குழந்தை!அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்ந்தால் எல்லா அருட்கொடைகளும் கிடைக்கும்!! நமக்கும்தான்!
சபையில் நின்று சொல்!
இறைவனுடைய வார்த்தையைச் சொல்லும் விஷயத்தில் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்: நீங்கள் சரி என்று சொன்னால் நாளைக்கும் நான் போய் இறைவனுடைய வேதத்தை ஓதிக்காட்ட தயாராக உள்ளேன்.அவர்கள் என்னை அடித்தாலும் உதைத்தாலும் அதற்கு எல்லாம் பயப்பட மாட்டேன்!ஈமான் என்றால் இறைநம்பிக்கை என்றால் இப்படி இருக்க வேண்டும்!!
"அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, நற்செயல்களைச் செய்து, (மக்களுக்கு நடுவில் நின்று பகிரங்கமாக) அழைப்பவரின் சொல்லைவிட சிறந்ததாக யாருடைய சொல் இருக்கமுடியும்?" (அல்குர்ஆன் 41:33)
உயர்ந்த மினாராக்கள்
இந்த உலகை படைத்தது ஓரே இறைவன் தான்!இந்த ஒரே இறைவனை மட்டும் தான் வணங்கவேண்டும்!அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது!கற்சிலைகளையோ, மரங்களையோ, இறந்த மனிதர்களையோ வணங்குவது பெரும்பாவம்!என்றெல்லாம் முஸ்அப் விளக்கினார். இறைவனின் வேதத்தை ஓதிக்காட்டினார்.ஒரு மனிதருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. அவர் நேராக மதீனா மக்களின் தலைவர்களான சஅத் மற்றும் உஸைதிடம் சென்று இதைத் தடுத்து நிறுத்துமாறு கூறினார்.அதைக் கேட்ட சஅத், உஸைதிடம், என்ன நடக்கின்றது? என்று விசாரித்து வாருங்கள்! ஒருவேளை வெளியூர்க்காரரான அந்த மனிதர் நம்முடைய தெய்வங்களைப் பற்றி கேவலமாகப் பேசினால் அவரை எச்சரித்துவிட்டு வாருங்கள்! என்று சொல்லி அனுப்பினார்.மதீ னாவின் தலைவர்களுள் உஸைத் முக்கியமானவர்!உஸைத் என்றால் இளஞ்சிங்கம் என்று அர்த்தம்!!நிதாமான அடிமேல் அடிவைத்து வந்து கொண்டிருந்த உஸைதை தூரத்திலேயே அஸ்அத் பார்த்துவிட்டார். உஸைதை சுட்டிக்காட்டி முஸ்அப்பிடம் அவர் கூறினார்.இதோ வருகிறாரே, இவர்தான் உஸைத் பெருந்தன்மையதனவர்;: கண்ணியமானவர்!இவர் மட்டும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் இவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அதாவது மதீனாவில் பாதிப்பேர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்!ஆகையால் எப்படியாவது இவருக்கு இஸ்லாமைப் புரியவைத்து விடுங்கள்!!நேராக வந்த உஸைத் முஸ்அபுக்கு முன்னால் நின்றுகொண்டார்.
எங்களுடைய அனுமதி இல்லாமல் எங்கள் முஹல்லாவில் என்ன பிரச்சாரம் செய்கிறீர்கள்?எதற்காக எங்களுடைய தெய்வங்களை எல்லாம் குறை கூறுகிறீர்கள்?எங்கள் மக்களில் பலவீனமான மக்களை ஏன் மதம் மாற்றுகிறீர்கள்?என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார்;. மெதுவாக முஸ்அப் தம்முடைய தலையை தூக்கிப் பார்த்தார்.ஒரே இறைவனை மட்டும் வணங்கபவர்களுடைய முகங்கள் எப்போதும் ஜொலித்துக் கொண்டே இருக்கும் அல்லவா? முஸ்அப்புடைய முகம் தகதகவென்று ஜொலித்துக் கொண்டிருந்தது.எங்களுடைய தலைவரே! தயவுசெய்து நான் சொல்லும் நல்ல வார்த்தையைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்!!அது என்ன நல்ல வார்த்தை? என்று கேட்டார் உஸைத்!கொஞ்ச நேரம் உட்காந்து கேட்டுப் பாருங்கள்! உங்களுக்கு சரி என்று தோன்றினால் மேற்கொண்டு கேளுங்கள்! பிடிக்கவில்லை என்றால் நாங்கள் இந்த இடத்தை விட்டே சென்று விடுகிறோம்!! என்று அமைதியாகக் கூறினார் முஸ்அப்.அப்படியா! நீங்கள் சொல்வதும் நியாயமாகத் தான் படுகின்றது! என்று சொல்லிவிட்டு தன்னுடைய ஈட்டியை நிலத்தில் ஊன்றிவிட்டு கீழே உட்கார்ந்து கொண்டார்.இஸ்லாம் என்றால் என்ன? ஒரே இறைவனை மட்டும் ஏன் வணங்கவேண்டும்? இறைவனின் வேதம் அல்குர்ஆன் என்றால் என்ன? என்பதைப் பற்றி எல்லாம் முஸ்அப் விளக்கினார். அல்குர்ஆன் வசனங்களையும் ஓதிக்காட்டினார்.தூய்மையான உள்ளங்கள் சத்தியத்தை வெகுவிரைவில் அடையாளம் கண்டுகொள்கின்றன.அப்படியா! நீங்கள் சொல்வதுதான் உண்மை என்று எனக்குத் தோன்றுகின்றது. ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்றால் நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார் உஸைத்!நீங்கள் உங்கள் உடலைத் தூய்மை செய்துகொண்டு ஒரே இறைவனை மட்டும் வணங்குவேன்: முஹம்மதை இறைவனின் தூதராக ஏற்றுக் கொண்டு பின்பற்றுவேன் என்ற உறுதிமொழியை வாய்வார்த்தைகளாகக் கூறவேண்டும்! உஸைத், உடனே எழுந்து பக்கத்தில் உள்ள கிணற்றுக்குச் சென்றார். நன்றாக உடம்பைத் தேய்த்து கழுவினார்.அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்:வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூஎன்று கூறி ஒரே இறைவனை மட்டும் வணங்கும் தூய முஸ்லிம்களின் கூட்டத்தோடு தன்னையும் இணைத்துக் கொண்டார்.மதீனாவின் தானைத்தலைவர், சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்பு பெருமை பாராட்டாமல், கர்வம் கொள்ளாமல் உடனே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்.மிகப்பெரும் வில்வித்தை வீரர்: அதே சமயம் மிகவும் அமைதியானவர்!எங்காவது முஸ்லிம்களின் படை கிளம்பிச் சென்றால் ஜிஹாத் செய்ய உஸைதும் கிளம்பிச் செல்வார்: இல்லையென்றால் வீட்டில் தனியாக உட்காந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பார்.உஸைத் ரழியல்லலாஹூ அன்ஹூ!அவர் மக்களின் தலைவராக இருந்தும் இறைவனுக்காக எல்லாவற்றையும் உதறித்தள்ளினார். இறைவனுக்குப் பிரியமானவராக மாறினார். இறைவனும் அவரை மிகவும் நேசித்தான்.நாமும் அவரை நேசிப்போம்: அவரைப் போல மாற ஆசைப்படுகிறோம்!!
மலக்குகளும் வருவார்கள் கேட்க!!
தனியாக உட்கார்ந்து ஓதிக்கொண்டே இருப்பார்.
அதுவும் இரவு நேரத்தில், மக்கள் எல்லாம் தூங்கிய பிறகு, நட்சத்திரங்கள் மட்டும் விழித்திருக்கும் நேரத்தில் தனியாக உட்கார்ந்து ஓதுவார்.
ஒருநாள் அதேபோல இரவுநேரம் ஊரெல்லாம் இருட்டு கவிந்திருந்தது.
தூங்க மனம் வரவில்லை உஸைதுக்கு!
இரவு நேரத்தில் இறை அடியார்கள் தூங்க நினைக்க மாட்டார்கள்.
இறைவனை வணங்க வேண்டும்: குர்ஆனை ஓதவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.
வீட்டின் கொல்லைப் புறத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். பக்கத்தில் தன்னுடைய மகனையும் படுக்கவைத்துக் கொண்டார்.
கொஞ்ச தூரம் தள்ளி அவருடைய குதிரை கட்டிப் போடப்பட்டிருந்தது. ஜிஹாதில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஆசையோடு வாங்கிய குதிரை அது!!
நிலவில்லாத வானம் அமைதியாக காணப்பட்டது.
விண்மீன்களும் மௌனமாக உட்கார்ந்தன.
முதல் அத்தியாயம் அல்பகராவை ஓதத் தொடங்கினார்.
குர்ஆனை ஓதுவதாக இருந்தால் இனிமையாக ஓதவேண்டும். என்று அல்லாஹவின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் சொல்லி உள்ளார்கள் அல்லவா?
அலிஃப், லாம், மீம்----- என்று ஓதிக் கொண்டே போனார்.
திடீரென்று அவருடைய குதிரை கனைத்தது:
துள்ளிக் குதித்தது!
கட்டியுள்ள கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிடும் போலத் தோன்றியது.
உஸைத் அதைப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஓதுவதை நிறுத்திவிட்டார்.குதிரையும் அமைதியாகிவிட்டது.
சத்தம் போடாமல் நின்று கொண்டது.
மீண்டும் உஸைத் குர்ஆனை ஓதத் தொடங்கினார்.
உலாயிக்க அலா ஹூதம் மிர்ரப்பிஹிம் வ உலாயிக்க ஹூமுல் முஃப்லிஹூன்....
குதிரை மீண்டும் கனைத்தது:
திமிறியது:
கால்களை உதைத்துக் கொண்டது.
உஸைத் பயந்து போனார்.
குதிரை பிய்த்துக் கொண்டுவந்து பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டுள்ள குழந்தையை உதைத்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்பட்டார்.
குர்ஆன் ஓதுவதை நிறுத்திவிட்டார்.
குதிரையும் அமைதியாகிவிட்டது.
குழந்தையை எடுப்பதற்காக குழந்தையின் பக்கத்தில் சென்றார்.
எழுந்துநின்று வானத்தைப் பார்;த்தவர் திகைப்படைந்து நின்றுவிட்டார். வானத்தில் எங்கும் மேகங்கள் நிறைந்து இருந்தன.
ஏதோ! ஒளியால் நிரம்பிய தொட்டியில் முக்கி எடுத்தவை போல அவை காணப்பட்டன.
என்னவென்று உற்றுப்பார்ப்பதற்குள் அவை மறைந்துவிட்டன.
காலையில் நடந்த விஷயங்களை எல்லாம் இறைத்தூதரிடம் சென்று கூறினார்
எல்லாவற்றையும் கேட்டபிறகு அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்:
நீங்கள் ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?
நீங்கள் ஓதுவதைக் கேட்க மலக்குகள் வந்து இருந்தார்கள்.
காலைவரை நீங்கள் ஓதி இருந்தால் மக்களும் அவர்களைப் பார்த்திருப்பார்கள்!!
எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் ஈடுபாட்டோடு செய்யவேண்டும்.
குர்ஆனை ஓதுவதாக இருந்தால் இறை அச்சத்தோடும் இக்ளாஸோடும் ஓதவேண்டும்.
சொத்தும் வேண்டாம்: சுகமும் வேண்டாம்!
அப்லா என்ற ஊரில் அவருடைய தந்தை பாரசீக நாட்டின் அதிகாரியாக இருந்தார்.
ஒருமுறை ரோம நாட்டினர் அந்த ஊரின் மீது படை எடுத்தார்கள்.
பாரசீக நாட்டுப் படையைத் தோற்கடித்து ஸூஹைபை கைதியாக பிடித்துக் கொண்டார்கள்.
மக்கா மாநகரில் அடிமையாக ஸூஹைபை விற்றுவிட்டார்கள்.
பின்னர் எப்படியோ ஒருவழியாக விடுதலையாகி அங்கேயே வாழ்ந்து வந்தார்.
தங்க நகைகள் செய்யும் தொழிலை செய்து வந்தார்.புகழ்பெற்ற ஆசாரியாக மாறிவிட்டார்.
ஏராளமான செல்வத்திற்கும் சொத்துக்களுக்கும் சொந்தக் காரராக மாறினார்.
இஸ்லாமியப் பிரச்சாரத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் ஆரம்பித்தபோது அதுதான் சத்தியம் என்பதை உணர்ந்து எற்றுக் கொண்டார்.முஸ்லிமாக மாறிவிட்டார்.
மக்கா நகரத்து மக்கள் முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடவில்லை.தொந்தரவுகளையும் தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
முஸ்லிம்களாக வாழவேண்டுமென்றால் அடி உதைகளை சகித்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற நிலையே நிலவியது.
எத்தனை நாளுக்குத்தான் கஷ்டங்களையும் அடி உதைகளையும் தாங்கிக் கொண்டு இருப்பது?
முஸ்லிம்கள் வசிப்பதற்காக வேறு இடங்களுக்கு செல்லத் தொடங்கினர்.
முதலில் அபிசீனியாவுக்கு சென்றார்கள்.பிறகு, மதீனாவுக்குக் கிளம்பினார்.
ஸூஹைபும் மதீனாவுக்குக் கிளம்பினார்.தன்னுடைய எல்லா சொத்துக்களையும் விற்று மூட்டையாகக் கட்டிக் கொண்டார்.
ஒட்டகத்தின் மீது சாமான் செட்டுகளை வைத்துக் கட்டிக் கொண்டு ஊரை விட்டுக் கிளம்பிவிட்டார்.
மக்கா நகரைத் தாண்டி மதீனா நகரை நோக்கி போகலானார்.
திடீரென்று குதிரைகளின் குளம்பு ஒலி கேட்டது.
அவரை நோக்கி வெகுதூரத்தில் பல குதிரைகள் வந்துகொண்டிருந்தன.
இதோ, குதிரைகள் அவரை நெருங்கி வந்து நின்றுகொண்டன.
எங்கே போகிறீர்கள் ஸூஹைப்? என்று வந்தவர்களில் ஒருவன் ஸூஹைபைப் பார்த்துக் கேட்டான்.
நானா? நான் மதீனாவுக்குப் போய்க் கொண்டுள்ளேன்!
நான் முஸ்லிமாக வாழ விரும்புகிறேன்.
என்னால் இங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை.
ஆகையால் தான் மதீனாவுக்குக் கிளம்பி விட்டேன்.
என்றார் ஸூஹைப்.
அப்படியா! அப்படியென்றால் இந்த சொத்துகளை எல்லாம் இங்கேயே இறக்கி வைத்துவிட்டுச் செல்!
-என்றான் இரண்டாவதாக இன்னொருவன்.
ஒன்றும் புரியாமல் அவனையே உற்றுப் பார்த்தார் ஸூஹைப்.
என்ன நான் சொல்வது உனக்கு விளங்கவில்லை?
நீ ஓர் அடிமையாக எங்கள் ஊருக்கு வந்தாய்.
இங்கேயே தொழிலைக் கற்றுக் கொண்டாய்.
ஏராளமான பணங்காசுகளை சம்பாதித்தாய்.
இப்போது எங்கள் சமயத்தை விட்டுவிட்டு வேறு ஒரு சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளாய்.
நீ சம்பாதித்த காசெல்லாம் எங்களுடையவை.
எங்களுக்கே சொந்தமானவை.
எங்கள் மதத்தைப் பின்பற்றுவதாக இருந்தால் இவ்வளவு சொத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு எங்களுடனேயே இருந்துவிடலாம்.
இல்லை, மதீனாவுக்குப் போவதாக இருந்தால் எங்கள் ஊரில் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போ!!
---என்றார்கள் வந்தவர்கள் அத்தனைபேரும்!!
ஒரு நிமிடம் நின்றார் ஸூஹைப்.
அவர்கள் சொன்னதை எல்லாம் மனதில் அசை போட்டுப் பார்த்தார்.
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவராகக் கூறினார்:
இதோ! இந்த இனைத்து சொத்துகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் ஒருக்காலும் என்னுடைய சமயத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக மாட்டேன்.
வெட்டுஒன்று துண்டுஇரண்டு என்பதைப்போல தெளிவாக தன்னுடைய கருத்தை கூறிவிட்டார்.
அவருடைய சொத்துகளை எல்லாம் அந்தக் காஃபிர்கள் பறித்துக் கொண்டார்கள்.
வெறுங்கையோடு ஸூஹைபை அனுப்பிவிட்டோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டடார்கள்.
ஆனால், உள்ளம் முழுக்க ஈமானை நிரப்பிக் கொண்டு ஸூஹைப் போனார்.
அவருடைய கைகள் காலியாக இருந்தன.
சொர்க்கமே அவருக்காக காத்துக் கொண்டு இருந்தது.
நான் சம்பாதித்த பொருள்: இதைக் காட்டிக் காப்பது என்னுடைய உரிமை என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை.
உரிமையை மீட்பதற்காக இஸ்லாமை இழந்துவிட அவர் தயாராக இல்லை.
இஸ்லாமுக்குப் பதிலாக இந்த உலகமே கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய?
அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக தங்களுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து விடுபவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்! (அல்குர்ஆன் 2:207)
அல்லாஹ்வோடு செய்துகொண்ட வாக்குறுதி
சொர்க்கத்துக்குச் சொந்தக்காரர்
நீங்கள் இறக்கும் வரைக்கும் இஸ்லாமின் மீதே நிலைத்து இருப்பீர்கள் என்பதுதான்இந்தக் கனவின் பொருளாகும்.அல்லாஹூ அக்பர்!சாகும் வரைக்கும் முஸ்லிமாக இருப்போமா என்பது யாருக்குமே தெரியாது.உண்மையான ஒவ்வொரு முஸ்லிமும் அதை எண்ணி பயந்துகொண்டே இருப்பான்.இறைத்தூதரின் வாயில் இருந்தே இத்தகைய ஓர் உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்ட அப்துல்லாஹ் எத்தகைய நல்ல மனிதராக இருந்திருப்பார்?இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அப்துல்லாஹ்வைப் பார்க்கும் போதெல்லாம் சொர்க்கவாசி வருகிறார்: இதோ சொர்க்கவாசி வருகிறார்! என்று கூறத் தொடங்கினார்..! உண்மைதானே?எவ்வளவு பெரிய பாக்கியம்!அல்லாஹ் உங்களையும் என்னையும் இத்தகைய மனிதர்களோடு சொர்க்கத்தில்ஒன்றாகச் சேர்த்து வைக்கவேண்டும்.
இறைத்தூதரின் பிரார்த்தனை வேண்டும்
சாதாரணமாக ஒருவரைப் பார்த்து நாம் ஸலாம் கூறினால் அவருக்காக நாம் துஆ செய்கிறோம் என்று தான் பொருள்!ஒரு முஸ்லிமுக்காக இன்னொரு முஸ்லிம் துஆ செய்தால் அல்லாஹ் அதனை உடனே ஏற்றுக் கொள்வான்.சாதாரண முஸ்லிமுடைய துஆவையே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்றால் அல்லாஹ்வுடைய தூதர் துஆ செய்தால் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பானா?கண்டிப்பாக ஏற்றுக் கொள்வான்.ஆகையால் இந்த முறையும் சஅத் பதில் சொல்லவில்லை.மெதுவாக பதில் கூறினார்கள். சஅதுடைய மகன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார்.ஷஷஅப்பா! ரசூலுல்லாஹ் ஸலாம் கூறுகிறார்கள். நீங்கள் பதில் சொல்லாமலேயே இருக்கிறீர்களே!-- என்று கேட்டார்.ஷஷஅமைதியாக இரு! இறைத்தூதர் ஸலாம் கூறினால் நமக்கு நலம் ஏற்படும். ---என்றால் சஅத்!மூன்றாவது முறையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் ஸலாம் கூறினார்கள்.மூன்றாவது முறையும் மெதுவாகவே சஅத் பதில் கூறினார்.மூன்று முறை ஸலாம் கூறியும் பதில் வராவிட்டால் நாம் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.மூன்றுமுறை கூப்பிட்டும் பதில் வராததால் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அங்கிருந்து கிளம்பத் தொடங்கினார்.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் போவதைக் கண்ட சஅத் ஓடோடிச் சென்று வஅலைக்கும் அஸ்ஸலாம் என்று சப்தமாகக் கூறினார்ஷஷஇறைத்தூதர் அவர்களே! தங்களுடைய துஆவை பெற்றுக் கொள்ளவேண்டும்.அதன்மூலமாக அல்லாஹ்வுடைய அருளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்;.என்பதற்காகத்தான் நான் சப்தமாக பதில் கூறாமல் மெதுவாக பதில் கூறினேன். ஆகையால் தவறாக எடுத்துக் கொள்ளமல் என் வீட்டுக்கு வாருங்கள்!!இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள்.இறைத்தூதரை சந்தோஷம் அடையச் செய்யமுடியும் என்றால் அதனைவிடப் பெரும் சந்தோஷம் என்னவாக இருக்கப் போகின்றது?
Tuesday, November 4, 2008
குழந்தைகள் இயற்கை மார்க்கத்தில் பிறக்கின்றன
1702. ''ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.''பிறகு அபூ ஹுரைரா(ரலி), எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும் என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தை ஓதிக்காட்டினார்.
புஹாரி : 1359 அபூஹூரைரா (ரலி).
1703. இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இவர்கள் (உயிருடன் இருந்திருந்தால்) என்ன செய்திருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்'' எனக் கூறினார்கள்.
புஹாரி :1384 அபூஹூரைரா (ரலி).
1704. இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் 'அவர்களைப் படைத்த அல்லாஹ், அவர்கள் (உயிருடனிருந்திருந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிந்தவன்'' எனக் கூறினார்கள்.
புஹாரி :1383 இப்னுஅப்பாஸ் (ரலி).
Monday, November 3, 2008
ஃதிக்ரின் சிறப்பு, அதற்காக ஆர்வ மூட்டுதல்
அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!
( அல்குர்ஆன் : 62:10 )
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்!
( அல்குர்ஆன் : 33:41,42 )
அலீ ( ரலி ) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்கள் தொழுதால், கடைசி இருப்பில் அத்தஹிய்யாத் மற்றும் ஸலாம் கூறுவதற்கு இடையே கடைசி வார்த்தையாக, ''அல்லாஹும்மஹ்ஃபிர்லீ மாகத்தம்து வமா அக்கர்து, வமா அஸ்ரர்து வமா அஃலன்து. வமா அஸ்ரஃப்து, வமா அன்த அஷ்லமு பிஹி மின்னீ அன்தல் முகத்தமு, வஅன்தல் முஅக்கரு, லாயிலாஹ இல்லா அன்த'' என்று கூறுவார்கள். ( முஸ்லிம் )
பொருள்:
இறைவா! நான் முன் செய்தவற்றையும், பின் செய்தவற்றையும், ரகசியமாக செய்தவற்றையும், வெளிப்படையாக செய்தவற்றையும், வீண் விரயம் செய்தவற்றையும், என்னைப் பற்றி என்னைவிட நீ அறிந்துள்ளவற்றையும் எனக்கு நீ மன்னிப்பாயாக! நீயே முற்படுத்தி வைப்பவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1424 )
அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்கள் தன் ருகூஉவிலும், தன் ஸஜ்தாவிலும், ''சுப்ஹானக் கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக, அல்லாஹும்மஹ்ஃபிர்லீ'' என்று அதிகமாக கூறுபவர்களாக இருந்தனர். (புகாரி,முஸ்லிம்)
பொருள்: இறைவா! எங்கள் இரட்சகனே! உன்னைப் புகழ்ந்து தூய்மையானவன் என போற்றுகிறேன். இறைவா! என்னை மன்னிப்பாயாக!
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1425 )
அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்கள் தன் ருகூஉ, ஸஜ்தாவில் ''சுப்பூஹுன், குத்தூசுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்'' என்று கூறுவார்கள். (முஸ்லிம்)
பொருள் : அல்லாஹ் தூய்மையானவன், பரிசுத்தமானவன். மேலும் வானவர்கள், ஜிப்ரீல் (அலை) ஆகியோரின் இறைவன். ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1426 )
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
(தொழுகையின்) ருகூஉவில் இறைவனை கண்ணியப்படுத்துங்கள். ஸஜ்தாவில் துஆச் செய்வதில் ஈடுபடுங்கள். உங்களுக்கு துஆ ஏற்கப்படக் கூடும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1427 )
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஸஜ்தா செய்யக்கூடிய அடியான் தான், தன் இறைவனுக்கு மிக நெருக்கமானவனாக உள்ளான். எனவே (அதில்) துஆவை அதிகமாக்குங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1428 )
''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''.
(நூல்: புகாரி, முஸ்லிம்)
துவாவுடைய ஒழுக்கங்கள்
1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்ப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.
இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார்.
பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக! அறிவிப்பாளர் கூறுகிறார்: பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ )
2. அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல் உயர்வானவனாகிய அல்லாஹ், மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186)
எனவே, அல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான். அவனுடைய அறிவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும். திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும், நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள். அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய விசாலமான தயாளத்தனத்தாலும், பேருபகாரத்தின் சிறப்பாலும் உங்களை எப்போது பிரார்த்தனைச் செய்பவரிடமிருந்து பேராதரவும் பிரார்த்தனையில் தூய்மையான எண்ணமும் ஏற்பட்டுவிடுமோ வெறுங்கையோடு திருப்பமாட்டான் என்பதை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனெனில், பிரார்த்தனை புரிபவர் (அல்லாஹ் நமது துஆவை ஏற்பான் என்ற) அவருடைய பேராதரவில் உறுதிகொண்டவராக இல்லையென்றால் அவருடைய துஆவும் தூய்மையானதாக அமையாது.
3. நமது பாவங்களை ஒப்புவித்தல் இந்தச் செயலே அல்லாஹ்வுக்குரிய நமது அடிமைத்தனத்தை நிரூபணம் செய்வதில் முழுமையானதாகும். அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:ஹாகிம்.
4. கேட்பதில் உறுதி உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரீ, முஸ்லிம் கேட்பதில் உறுதி என்பதன் நோக்கமாவது, தேடிப் பெறுவதில் நிரந்தரமாக நிலைத்து சளைக்காமல் பிடிவாதமாக மன்றாடிக் கேட்பது, அல்லாஹ்விடம் மிகக் கடுமையாக தெண்டித்துக் கேட்குதலைக் குறிப்பதாகும்.
5. பிரார்த்தனையில் கடுமை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரிய ஒரு போர்வை திருடப்பட்டுவிட்டது. அதைத் திருடியவருக்கெதிராக துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (திருடியதால் அவருக்குண்டான பாவத்தை அவருக்குக் கேட்பதில்) அவர் விஷயத்தில் மென்மையைக் கையாளவேண்டாம் என்று கூறினார்கள். (நூல்:அபூதாவூது)
6. ஒன்றை மூன்று முறை கேட்டு துஆச் செய்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தொழுகையை முடித்துக் கொண்ட போது, தனது தொணியை உயர்த்தி பின்னர் (பகைவர்களான) அவர்களுக்குக் கேடாக பிரார்த் தனை செய்தார்கள். அவர்கள் எதையும் பிரார்த்தனைச் செய்பவர்களாக இருந்தால் மூன்று முறை துஆச் செய்வார்கள். யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! என பின்னர் கூறினார்கள் என்று இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவிப்பில் முஸ்லிமில் வந்துள்ள நீளமான ஹதீஸில் நபிவழியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
7. 'ஜவாமிஉ' (சுருக்கமான வார்த்தையில் விசாலமான அர்த்தங்களைக் கொண்டுள்ள) துஆக்களைக் கூறி பிரார்த்தனைப் புரிதல் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக்களில் நிறைய பொருளை தரும் சுருக்கமான வார்த்தைகளை விரும்புபவர்களாகவும் அதுவல்லாத வார்த்தைகளை கூறாது விட்டு விடுபவர்களாகவும் இருந்தனர். நூல்: ஸன்னன் அபீதாவூது, அஹ்மது இதுமாதிரியான பிரார்த்தனைகளில் உள்ளதே ஃபர்வா பின் நவ்ஃபல் அவர்கள் அறிவிப்பில் வந்துள்ள ஒன்று. நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக்கொண்டு துஆச் செய்பவர்களாக இருந்தார்களோ அப்படியான ஒரு துஆவைப்பற்றி நான் கேட்டேன். اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عمِلْتُ وَشَرِّ مَالَمْ أَعْمَلْஅல்லாஹும்ம! இன்னீ அஊது பிக மின் ஷர்ரி மா அமில்த்து, வ ஷர்ரி மாலம் அஃமல் என்று துஆச்செய்பவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள். (பொருள்: யாஅல்லாஹ்! நான் செய்து விட்டவற்றின் தீங்கிலிருந்தும் மற்றும் நான் செய் யாதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்) நூல்: முஸ்லிம், அபூதாவூது
اَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِي أِمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ جِدِّيْ وَهَزْلِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ ، اَللَّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَ أَنْتَ عَلى كُلِّ شَيئٍ قَدِيْرٌ
அல்லாஹும்மக் ஃபிர்லீ கதீஅதீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பி?ி மின்னீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ ஜித்தீ வ?ஜ்லீ, வ கதஈ, வ அம்தீ, வ குல்லு தாலிக இன்தீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ மா கத்தம்த்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ அன்த்தல் முகத்திமு, வஅன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர் என இந்த துஆவைக் கூறி பிரார்த்தனை புரிபவர்களாக நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என அபூமூஸப் அல் அஷ்அரீ - ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்
(பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய தவறை, எனது அறியாமையை, எனது காரியத்தில் வீண்விரயத்தை, என்னைவிட நீ அறிந்திருக்கும் ஒன்றை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! யாஅல்லாஹ்! என்னுடைய முயற்சி(யால் ஏற்பட்டதை), என்னுடைய சோர்வு, என்னுடைய தவறு, வேண்டுமென்றே தெரிந்து என்னால் செய்யப்பட்டது, என்னிடமுள்ள அவை ஒவ்வொன் றையும் நீ எனக்கு பொருத்தருள்வாயாக! யாஅல்லாஹ்! நான் முற்படுத்தியவற்றை, நான் பிற்படுத்தியவற்றை, நான் மறைத்தவற்றை, நான் பகிரங்கப்படுத்தியவற்றை, நான் விரயம் செய்தவற்றை, என்னை விட நீ எதை மிக அறிந்திருக்கின் றாயோ அந்த ஒன்றை நீ எனக்கு பொருத்தருள்வாயாக! நீதான் (நன்மைகளைச் செய்ய) முற்படுத்தி வைப்பவன், நீயே (தீயவற்றைச் செய்யாது காத்து) பிற்படுத்திவைப்பவன், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.) 8. பிரார்த்தனை புரிபவர் தனக்காக முதலில் கேட்பார் உயர்வானவனின் கூற்றில் வந்துள்ளவற்றைப் போன்று:-رَبَّـنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُونَا بِالْإِيْمَانِ எங்களுடைய இரட்சகனே! எங்களுக்கும், ஈமான் கொண்டு எங்களை முந்திவிட்டார்களே அத்தகையோரான எங்களுடைய சகோதரர்களுக்கும் நீ பொருத்தருள்வாயாக! அல்ஹஷ்ரு: 10 இன்னும் அவனுடைய கூற்று:-قَالَ رَبِّ اغْفِرْ لِيْ وَلِأَخِيْ وَأَدْخِلْنَا فِيْ رَحْمَتِكَ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ எனது இரட்சகா! எனக்கும் என்னுடைய சகோதரருக்கும் நீ பொருத்தருள்வாயாக! மேலும், எங்களை உன்னுடைய ரஹ்மத்தில் நுழைவிக்கச் செய்திடுவாயாக! என்று (நபி மூஸப்) அவர்கள் கூறினார்கள். அல் அஃராஃப்:151இன்னும், அவனுடைய கூற்று:- رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ எங்கள் இரட்சகா! எனக்கும், என்னுடைய பெற்றோர்களுக்கும், விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் நாளில் பொருத்தருள்வாயாக! இப்றாஹீீம்:41 நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரை யாவது நினைவுகூர்ந்து, அவருக்காக பிரார்த்தனை புரிவார்களானால் தனக்காக அதை முதலில் கேட்டு ஆரம்பிப்பார்கள். (திர்மிதீ) எனினும், இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டாயமான வழக்கமாக இருந்ததில்லை. ஏனெனில், சில சமயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவருக்கு துஆச் செய்து கேட்டதை தனக்கு கேட்காமல் துஆச் செய்திருப்பதும் சரியான வழியில் வந்துள்ளது (நபி இப்றாஹீீம் அவர்களின் துணைவியர்) ஹாஜர் விஷயத்தில், 'இஸ்மாயீலின் தாயாருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! ஜம்ஜம் (நில்நில்)என்று சொல்வதை விட்டிருப்பார்களானால் (ஜம்ஜம் ஊற்றான) அது பெருக்கெடுத்து ஓடிவிடும் ஒரு பெரும் ஊற்றாக ஆகியிருக்கும் என்று கூறியது போன்று! 9. துஆச் செய்ய விரும்பத்தக்க நேரங்களில் துஆச் செய்ய முயற்சிப்பது அவ்வாறான நேரங்களில் உள்ளதே நடு இரவு, பாங்கு மற்றும் இகாமத்துக்கு இடையேயான நேரம், ஸஜ்தாவில், (போருக்கு) அழைக்குமிடத்தில், போர் சமயத்தில், ஜும்ஆ தினத்தின் அசருக்குப்பின், அரஃபா நாள், மழை பொழியும் நேரம், ரமளானின் கடைசி பத்து நாட்கள்.
Sunday, November 2, 2008
அல்லாஹ் நேசிக்கும் அடியானை வானவர்கள் நேசிப்பர்.
புஹாரி : 7485 அபூஹுரைரா (ரலி).
1693. கிராமவாசிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போதும் சம்பவிக்கும்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்?' என்று கேட்டார்கள். அவர் 'நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், '(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!'' என்றார்கள்.
புஹாரி : 6167 அனஸ் (ரலி).
1694. ''(இறைத்தூதர் அவர்களே!) ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?)'' என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 6170 அபூமூஸா (ரலி).
தாயின் கருவறையில் சிசுவின் விதி நிர்ணயிக்கப் படுதல்
புஹாரி : 3208 இப்னு மஸ்ஊத் (ரலி).
1696. 'அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறி வருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.
புஹாரி : 318 அனஸ் (ரலி).
1697. நாங்கள் பகீவுல் கர்கத் (என்னும் பொது) மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தலைகுனிந்தவர்களாகத் தம் கைத்தடியால் தரையைக் கீறிக் கொண்டு, 'உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை. அது தீய நிலையுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை' எனக் கூறினார்கள். உடனே ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதை நம்பி (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம் விட்டுவிடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள் தாமே?' என்றதும், நபி (ஸல்) அவர்கள், 'நம்மில் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்கு நற்செயல்கள் செய்வது எளிதாக்கப்படும்; தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்'' என்று கூறிவிட்டு, 'தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகிறவர்...'' என்ற (திருக்குர்ஆன் 92:5,6) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
புஹாரி : 1362 அலீ (ரலி).
1698. ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'ஆம் (தெரியும்)'' என்றார்கள். அவர் 'அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'ஒவ்வொருவரும் 'எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது 'எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 6596 இம்ரான் பின் ஹூஸைன் (ரலி).
1699. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'மக்களின் வெளிப் பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்'' என்றார்கள்.
புஹாரி :2898 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).
Wednesday, October 29, 2008
பெண் குழந்தைகள் நரகின் திரை.
1688. ஒரு பெண்மணி தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், 'இவ்வாறு பல பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள்.
புஹாரி :1418 ஆயிஷா (ரலி).:1418 ஆயிஷா (ரலி).
நபி ஆதம் (அலை) நபி மூஸா (அலை) தர்க்கம்.
1700. (இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் 'ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்'' என்றார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் 'மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் (வேதத்தை) வரைந்தான். (இத்தகைய நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?' என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; என மூன்று முறை ' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.
புஹாரி : 6614 அபூஹுரைரா (ரலி) .
அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு
1. இரண்டு பழக்கங்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்தவை. அவை என்னவெனில் இறைநம்பிக்கையும் முஸ்லிம்களின் நலன் நாடுதலும் ஆகும்.
2. இரண்டு பழக்கங்கள் எல்லாவற்றையும் விட மோசமானவை. அவை என்னவெனில் இறைவனோடு மற்றவர்களை இணையாக்குவதும் முஸ்லிம்களுக்கு கேடு விளைவிப்பதும் அவர்களுடன் மோசமாக நடந்துகொள்வதும் ஆகும்.
"சந்தேகப்படுவதிலிருந்து விலகி இருங்கள். ஏனெனில் சந்தேகத்துடன்சொல்லப்படும் விஷயம் மிகப் பெரும் பொய் ஆகும்.
பிறருடைய நன்மை, தீமைபற்றி அறிய வேண்டும் என்று செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றித் துருவித் துருவி ஆராயாதீர்கள்.
மற்றவர்களை விட அதிகமானவிலையைச் சொல்லாதீர்கள்.
பரஸ்பரம் பொறாமை கொள்ளாதீர்கள். ஒருவர் மீதுஒருவர் வெறுப்பு கொள்ளாதீர்கள்.
பரஸ்பரம் பகைமை பாராட்டாதீர்கள்.
தொடர்பைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள்.
இறைவனின் நல்லடியார்களாக, ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்."
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்
அம்ருபின் அபச (ரலி) அறிவிக்கின்றார்கள். நான் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களிடம் சென்று "இறைத்தூதரே! 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டேன். அண்ணல் நபிகளார் (ஸல்) விடையளித்தார்கள் : "பொறுமையும் வள்ளல்குணமும்"
அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்
இல்லை என்று சொல்லாத உயர்ந்த உள்ளம்!
அஸ்மா(ரலி) அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: "செலவிடு. எண்ணி எண்ணிக் கொடுக்காதே. இறைவனும் உனக்கு எண்ணிக்கொடுப்பான். கொடுக்காமல் மறுத்து விடாதே. இறைவனும் உனக்குக் கொடுக்கமறுத்து விடுவான். உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடு."நூல்: புகாரி. முஸ்லிம்
அண்ணல் நபிகளார்(ஸல்) நவின்றார்கள்:
"மனிதர்களுடன் கருணையுடன் நடந்துக் கொள்ளாதவன் மீது இறைவனும்கருணை காட்ட மாட்டான்." அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி)நூல்: புஹாரி, முஸ்லிம்.விளக்கம்:இதே பொருளில் அநேக நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "யார் கருணை காட்டுவதில்லையோ, அவர் மீது இறைவனும் கருணைகாட்ட மாட்டான்." (முஸ்லிம்) "மக்கள் மீது கருணை காட்டாதவர்கள் மீதுஇறைவனும் கருணை காட்ட மாட்டான்." (புஹாரி)இதே போல இன்னொரு நபிமொழியில். "நம்மில் சிறியவர்கள் மீது அன்புசெலுத்தாதவனும் பெரியவர்களின் உரிமைகளை புரிந்து நம்மைச் சேர்ந்தவர்அல்ல" (அபூ தாவூத்) என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.அஹ்மத், திர்மிதி ஆகிய நபிமொழித் தொகுப்பு நூல்களில் இடம் பெற்றுள்ள ஒருநபிமொழியில், "பெரியவர்களை மதிக்காதவனும் சிறியவர்களிடம் இரக்கத்துடன்நடந்துக் கொள்ளாதவனும் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கிற கடமையைநிறைவேற்றாதவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன் (நம்முடையவழிமுறையின்படி நடப்பவன் அல்லன்.)" எனச் சொல்லப்பட்டுள்ளது.இந்த நபிமொழிகளிலிருந்து ஒரு உண்மை எடுப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது: "இறைவனின் அடியார்களுடன் கனிவுடனும் அருளுடனும் நாம் நடந்துக்கொண்டால் மட்டுமே இறைவனின் உதவிக்கும் அவனுடைய இரக்கத்துக்கும்கருணைக்கும் தகுதியானவர்களாக ஆவோம்."நாம் இவ்வாறு அழகிய இளகிய நடத்தையை மேற்கொள்வோமேயானால்இறைவனின் கருணை நமக்குக் கிடைத்து விட்டது என்று பொருள் ஆகும். நம்மிடம் அந்த இளகிய நடத்தையே இல்லையெனில் இறைவனின் உதவிகள், அவனுடைய கருணை, கிருபை ஆகியவற்றை விட்டு நம்மை நாமே வெகு தூரம்விலக்கிக் கொள்ள விரும்புகிறவர்கள் நாம் என்று பொருள் ஆகி விடும்.நபிமொழியில் 'அன்னாஸ்' (மனிதர்கள்) என்கிற சொல் கையாளப்பட்டுள்ளது. மனிதர்களில் நம்பிக்கையாளர்கள், தீயவர்கள், நிராகரிப்பாளர்கள் எல்லோருமேஅடங்கி விடுவார்கள்.எல்லா மனிதர்களும் நம்முடைய கிருபைக்கும் கருணைக்கும்உரித்தானவர்களே!இன்னும் சொல்லப் போனால் இறைநிராகரிப்பாளர்கள்குறித்து நமக்குள் சற்று அதிகமாகவே அன்பும் கருணையும் தவிப்பும் இருக்கவேண்டும். இறைநிராகரிப்புப் போக்கிலிருந்து இவர்கள் விலக வேண்டாமா? இறைவேதனையிலிருந்து இவர்கள் தப்ப வேண்டாமா? என்கிற கவலைஅதிகமாக இருக்க வேண்டும்.
ஹதிஸ்
நல்லவைக்குப் பரிந்துரை செய்.
1686. நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்'' எனக் கூறினார்கள்.
புஹாரி :1432 அபூமூஸா (ரலி).
நல்ல கெட்ட நண்பர்கள் பற்றி..
1687. நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :5534 அபூ மூஸா (ரலி) .
தமக்குத் துன்பம் தராத விலங்குகளைத் துன்புறுத்துதல்1683. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை. அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை. அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3482 இப்னு உமர் (ரலி).
அண்டை வீட்டார் நலம் பேணுதல்
1684. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6014 ஆயிஷா (ரலி) .1685. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வப்போது) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6015 இப்னு உமர் (ரலி).
Thursday, October 23, 2008
தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்!
(பொருள் : அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். இறைவா நீ எல்லாக் குறைகளை விட்டும் பாதுகாப்பு பெற்றவன். உன்னிடமிருந்தே பாதுகாப்பு ஏற்படுகின்றது. மதிப்பும் மகத்துவமும் மிக்கவனே! நீ உயர்ந்து விட்டாய்!)
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின் கல் ஜத்”
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே! புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுப்தைக் கொடுப்பவர் எவருமில்லை. மதிப்புடைய எவரும் எந்தப் பயனும் அளிக்கமாட்டார். மதிப்பு உன்னிடமே உள்ளது)
“லாஹவ்ல லாகுவ்வத்த இல்லா பில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் ஃபழ்லு வலஹுல் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரீஹல் காஃபிரூன்”
(பொருள் : அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றைச் செய்யவோ தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருட்கொடை அவனுக்குரியது. பேருபகாரமும் அவனுக்குரியது. அழகிய புகழும் அவனுக்குரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. நிராகரிப்போர் விரும்பாவிட்டாலும் வணக்கங்களை அவனுக்கு மட்டுமே கலப்பற்ற முறையில் செய்வோம்)
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”
- இதை மஃரிபுக்குப் பிறகும், பஜ்ருக்குப் பிறகும் பத்து தடவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
(பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சி அதிகாரம் அவனுக்குரியதே! அவனுக்கே எல்லாப் புகழும். அவனே வாழ்வும் மரணமும் அளிக்கின்றான். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்)
பிறகு,
“சுப்ஹானல்லாஹ்” - 33 தடவைகள்
“அல்ஹம்துலில்லாஹ்” - 33 தடவைகள்
“அல்லாஹு அக்பர்” - 33 தடவைகள்
பிறகு,
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” - ஒரு தடவை ஓத வேண்டும்.
ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும்,
ஆயத்துல் குர்ஸி,
குல் ஹுவல்லாஹு அஹத்,
குல் அவூது பிரப்பில் ஃபலக்,
குல் அவூது பிரப்பின்னாஸ் ஓத வேண்டும்.
இந்த மூன்று சூராக்களையும் மஃரிபுக்குப் பிறகும், பஜ்ருக்குப் பிறகும் மூன்று தடவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
இஸ்லாத்தின் பர்வையில் மது அருந்துதல்!
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)
மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன்)
மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: -
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள்: அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.
மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்: -
மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)
“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”
மது அருந்துபவர்களுக்கு மறுமையில் புகட்டப்படும் பானம்: -
“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.
மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்: -நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான்.
அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்
போதை தரும் அனைத்துமே மதுவைச் சேர்ந்ததாகும்: -
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்
வெ்வேறு பெயர்களில் புழங்கும் மது வகைகள் பற்றிய எச்சரிக்கைகள்: -
‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம்: இப்னுமாஜா
‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மது அருந்தியவனுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்த தண்டனை: -
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)
மது அருந்திய நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்! அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் மன்னிப்பான்: -
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்து விட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)
Thanks: http://suvanathendral.com
தூங்கும் போதும், தூக்கத்திலிருந்து எழும் போதும் கூற வேண்டியவை
பொருள்: இறைவா! உன் பெயரால் தூங்குகிறேன், உன் பெயரால் விழிப்றேன்.
பொருள்: எங்களை உறங்கச் செய்தபின் எங்களை விழிக்கச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப்
புகழும். அவனிடமே மீண்டும் திரும்புதல் உண்டு. (ரியாளுஸ்ஸாலிஹீன்)
காலையிலும், மாலையும் அல்லாஹ்வை நினைவு கொள்வது!
அல்லாஹ் கூறுகிறான்: உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன்)
நபியே) சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! (அல்குர்ஆன்)
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் போற்றிப் புகழ்வீராக! (அல்குர்ஆன்)
(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ, அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காலையிலும், மாலையிலும், '' சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி '' என 100 தடவை ஒருவர் கூறினால், இது போன்று கூறியவர், அல்லது இதைவிட அதிகம் கூறியவர் தவிர, மறுமை நாளில் எவரும் இவர் கொண்டு வந்ததை விட மிகச் சிறந்ததை கொண்டு வரமாட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! இரவில் தேள் ஒன்று என்னைக் கொட்டி விட்டது'' என்று கூறினார். ''அறிந்து கொள்! மாலை நேரம் வந்ததும், ''அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின்ஷர்ரி மா கலக'' என்று கூறினால், அது உமக்கு இடையூறு தராது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
பொருள்: அல்லாஹ்வின் படைப்புகளின் தீமைகளை விட்டும் முழுமையான அவனது சொற்களால் பாதுகாப்புத் தேடுகிறேன். (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1452)
அப்துல்லாஹ் இப்னு குபைப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: காலையிலும், மாலையிலும் ''குல்ஹுவல்லாஹுஅஹது'' அத்தியாயம், மற்றும் (குல்அஊது பிரப்பில் ஃபலக், குல்அஊது பிரப்பின்னாஸ் என்ற) இரண்டு முஅவ்விததய்ன் அத்தியாயத்தையும் மூன்று தடவை நீர் கூறுவீராக! அனைத்துப் பொருட்களின் தீமையை விட்டும் (உம்மை பாதுகாத்திட) உமக்கு அது போதும்'' என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்)
Tuesday, October 14, 2008
அநீதி தவிர்..
புஹாரி : 2447 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
1667. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :2442 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
1668. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்'' என்று கூறிவிட்டு, பிறகு, 'மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 11:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
புஹாரி :4686 அபூமூஸா (ரலி).
Monday, October 13, 2008
விசுவாசியின் பிணி பாவ பரிகாரமே
1662. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்'' என்று கூறினார்கள். நான், '(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 5648 இப்னு மஸ்ஊது (ரலி).
1663. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5640 ஆயிஷா (ரலி) .
1664. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5641 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அபூஹுரைரா (ரலி) .
1665. இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
புஹாரி :5652.அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்).
மரணத் தருவாயில்..َபெருமானார் (ஸல்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தால் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சித்தேன்'' என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)மேலும், ''அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா'' என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) ''எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!'' என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள்.முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள். ''ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)தங்கள் முகத்திலிருந்த போர்வையை நபி (ஸல்) தூக்கி எறிந்தார்கள். அவர்கள் மீது திரும்ப போர்த்தினால் முகத்தில் இருப்பதை மட்டும் அகற்றி விடுவார்கள். இந்நிலையில் சிலவற்றை நபி (ஸல்) கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் åத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.'' (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:''நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். ''நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?'' என்று கேட்டபோது, ''ஆம்!'' என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. ''நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?'' என்று கேட்டேன். தலை அசைத்து ''ஆம்!'' என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.''இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: ''நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். ''லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.நபி (ஸல்) அப்போது ''இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்...அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.
ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.
அபுபக்கர் (ரலி)......
07, ஜமாதுல் ஆகிர் ஹிஜ்ரி 13, ஆம் ஆண்டில், ஒரு குளிர் நாளில் அபுபக்கர் (ரலி) அவர்கள் குளித்து விட்டு வரும் பொழுது அடித்த குளிர் காற்றில் அவர்களது மேனியில் தாக்கப்பட்டதன் காரணமாக, உடனே அவர்களுக்கு காய்ச்சல் காண ஆரம்பித்து விட்டது. அதுவே அவர்களது மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.பதினைந்து நாட்களாக அவர்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள். அவர்களது நிலைமை மிகவும் மோசமாக ஆனதுடன், பள்ளிவாசலுக்குச் சென்று தொழவே மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே, உமர் (ரலி) அவர்களை இமாமாக நியமித்து தொழுகைகளை நடத்தும்படி உத்தரவிட்டார்கள்.
இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களது நிலை மிகவும் மோசமாக ஆகிக் கொண்டிருந்த பொழுது, மருத்துவர் அழைக்கப்பட்டார். ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களோ எல்லாம் முடிந்து விட்டது, இனி மருத்துவர் வந்து என்ன பயன்! என்று கூறி விட்டார்கள். மீண்டும் அவர்களிடம் இது பற்றிக் கேட்ட பொழுது, நான் என்ன சொல்கின்றேனோ அதனை நீங்கள் செய்தால் போதுமானது என்று கூறி விட்டார்கள். எனவே, மீண்டும் அபுபக்கர் (ரலி) அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாத தோழர்களும், குடும்பத்தவர்களும் அமைதியாக இருந்து விட்டார்கள்.
நோய்வாய்ப்பட்;டிருந்த அந்த கால கட்டத்தில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அளித்த வீட்டில் - அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களது பள்ளிக்கு மிக அருகிலேயே தனது இறுதிக் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களது வீடும் அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு மிகத் தொலைவில் ஒன்றும் இல்லை, அன்னார் தனது அதிகமான நேரங்களை அபுபக்கர் (ரலி) அவர்களுடனேயே கழித்தார்கள். எப்பொழுதும் அபுபக்கர் (ரலி) அவர்களது படுக்கைக்கு மிக அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இப்பொழுது கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள், தனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பிற்கு யாரை நியமிப்பது என்றும், அவ்வாறு தான் செய்யவில்லையாயின் மக்கள் தங்களுக்குள் முட்டி மோதி, ஒரு குழப்பமான நிலை உருவாகி விடுமே என்றும் கருதலானார்கள். தனது விருப்பத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மூத்த தோழர்களிடம் கலந்தாலோசனை செய்து, இறுதியாக உமர் (ரலி) அவர்களை தனக்குப் பின் அடுத்த கலீஃபாவாக நியமிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள்.உமர் (ரலி) அவர்களின் முன் கோபம் குறித்து சிலர் அவரை ஆட்சியாளராக நியமிப்பது குறித்து அச்சம் தெரிவித்தனர். அத்தகையவர்களை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள், உமர் (ரலி) அவர்களிடம் உள்ள நற்குணம் என்னவென்றால், ஆட்சித் தலைவருக்கே உரிய குணங்களான, வளைந்து கொடுத்துப் போகாத தன்மையும், இளகிய மனதும் அவரிடம் இருக்கின்றது என்று விளக்கமளித்தார்கள். மேலும் தொடர்ந்து, நான் அவரிடம் பழகிய நாட்களின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின்படி, நான் கோபமாக இருக்கின்ற சமயத்தில் அவர் என்னை சாந்தப்படுத்த முயற்சி செய்திருக்கின்றார், இன்னும் இளகிய மனதுடன் காணப்பட்ட இடங்களில் உறுதியுடன் இருக்குமாறும் அவர் எனக்கு அறிவுரை பகர்ந்துள்ளார்.
மேற்கண்ட அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு, தனது வீட்டின் மாடிப் பகுதிக்குச் சென்ற அபுபக்கர் (ரலி) அவர்கள், மிகவும் தளர்ந்து போயிருந்த காரணத்தால், தனது மனைவியான அமிஸ் அவர்களின் மகளான அஸ்மா அவர்களின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டவராக அங்கே கூடி நின்ற மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் :
எனக்கு அடுத்ததாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நடத்துவதற்காக நான் தேர்ந்தெடுத்திருக்கின்ற நபரை நீங்கள் உங்களது ஆட்சியாளராக ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். நிச்சயமாக, நான் ஏன் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன் என்பதனை விளக்குவதற்கு எனது உடல் வலி இடம் தராத நிலையில் நான் இருக்கின்றேன். நான் எனது உறவினர் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை. எனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்துவதற்குரியவராக, உமர் (ரலி) அவர்களையே நான் தேர்வு செய்துள்ளேன். நான் சொல்வதை செவிதாழ்த்திக் கேளுங்கள், எனது விருப்பத்திற்கு நீங்கள் ஒத்துழைப்புத் தாருங்கள் என்று தனது உரையை முடித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.அங்கு கூடியிருந்த அனைவரும் ஒருமித்த குரலில், ''நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், அதற்கு கட்டுப்படுகின்றோம்'' என்று கூறினார்கள்.
அதன் பின் அங்கிருந்த உதுமான் (ரலி) அவர்களை அழைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது உரையை மக்களிடம் வாசித்துக் காண்பிக்குமாறு கூறினார்கள் :
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்...
அபுபக்கர் பின் அபூ குஹஃபா ஆகிய நான் இந்த உலகத்தை விட்டுப் பிரிகின்ற தருணத்தில் இன்னும் மறுமைக்குப் பயணப்படுகின்ற ஆரம்ப நேரத்தில், இன்னும் நிராகரிப்பளர்கள் சத்தியத்தை விசுவாசிப்பவர்களாக மாற விரும்புகின்ற, சத்தியத்தை அசாதாரணமாக கருதிக் கொண்டிருந்தவர்கள் சத்திய சீலர்களாக மாற நினைக்கின்ற மற்றும் பொய்யர்கள் சத்தியவான்களாக மாற விருக்கின்ற அந்த மறு உலகத்தின் முதற்படிக்குச் செல்வதற்காக உங்களிடம் பிரியாவிடை பகர்கின்ற நான் ஆற்றுகின்ற இறுதி உரையாகும் இது!
எனக்குப் பின் ஆட்சியாளராக உமர் (ரலி) அவர்களை நான் நியமித்துள்ளேன். அவருக்கு செவிதாழ்த்துங்கள், கட்டுப்படுங்கள். (நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்) அல்லாஹ்வின் அவனது தூதர் (ஸல்) அவர்களும் என் மீது பொறுப்புச் சுமத்திய கடமைகளையும், இன்னும் உங்கள் மீதும் என் மீதும், நான் என்னால் இயலுமான வரை நிறைவேற்றி உள்ளேன். அவர் நீதி செலுத்தவராரென்றால், அதனைத் தான் அவரிடம் நான் எதிர்பார்த்தது. மேலும், அது நான் அவரிடம் அறிந்து வைத்திருந்தது, இன்னும் (நல்லதொரு) மாற்றங்கள் செய்வாரென்றால், அதில் கிடைக்கக் கூடிய நல்லனவற்றை நீங்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள். என்னுடைய நோக்கம் சிறந்ததென்றே கருதுகின்றேன், ஆனால் மறைவானவற்றை நான் அறியக் கூடியவனல்லன். ஆனால், எவரொருவர் தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துவாரென்றால், அவர் விரைவில் ஆட்சிப் பொறுப்பினை விட்டும் எவ்வாறு அகற்றப்படுவார் என்பதனையும் கண்டு கொள்வார்.உங்கள் மீது இறைவனது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! (என்று கூறி தனது உரையை முடித்தார்கள்).
இந்த உரையை முடித்த பின் ஒரு மனிதர் அபுபக்கர் (ரலி) அவர்களைச் சந்தித்து, உமரையா உங்களையடுத்த ஆட்சியாளராக நியமித்திருக்கின்றீர்கள், உங்கள் முன்பதாகவே அவர் மக்களை எந்தவிதமாக நடத்தினார்கள் என்பதனை நீங்கள் அறியாததொன்றுமல்ல என்று கூறினார். இப்பொழுது அவரே முழு ஆட்சிப் பொறுப்புக்கும் உரித்தவராகி விட்டார், மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம் என்றும் வந்த அந்த மனிதர் கூறினார். நீங்கள் இப்பொழுது உங்களது இறைவனைச் சந்திக்கப் போகின்றீர்கள், மக்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உங்களின் இந்த நிலை குறித்து அங்கே நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என்றும் அந்த நபர் கூறினார். படுக்கையில் படுத்துக் கிடந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், வந்திருந்த நபரை அமரச் சொல்லி விட்டு, எனது இறைவனைச் சந்திக்கின்ற பொழுது, அச்சத்தோடு அவனைச் சந்திக்கின்ற நிலையைக் கூறி என்னை கலவரமடையச் செய்கின்றீர்களா? எனது இறைவன் முன்னிலையில் நான் நின்று கொண்டிருக்கும் பொழுது, 'உன்னுடைய படைப்பினங்களிலேயே உன்னதமான படைப்பளார் ஒருவரை எனக்குப் பின் ஆட்சியாளராக நியமித்து விட்டு வந்திருக்கின்றேன்' என்ற பதிலைக் கூறுவேன் என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறி விட்டு, உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.
தனிமையில் அவர்களை அமர வைத்து, உமர் (ரலி) அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறினார்கள். பின்பு, இறைவனை நோக்கி கையை உயர்த்திய அபுபக்கர்(ரலி) அவர்கள், இறைவா! இந்த மக்களின் நல்வாழ்வுக்காகவே இவரை நான் தேர்வு செய்தேன், இன்னும் ஒருவரோடு ஒருவர் கருத்துமுரண்பாடு கொள்வதனின்றும் தடுக்கும் பொருட்டே இந்தத் தேர்வினை நான் செய்தேன். நீயே மிக அறிந்தவன்! என்று கூறினார். மிக நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே நான் உமரை எனக்குப் பின்னர் ஆட்சியாளராக நியமித்தேன். மிகச் சிறந்தவரும், உறுதி படைத்தவரும், இன்னும் நேர்வழியைப் பின்பற்றி நடப்பதற்கு ஆர்வம் கொண்டவருமாவார். யா அல்லாஹ்! ஆட்சியாளர்களை நேர்வழியில் நடப்பவர்களாக நீ ஆக்கியருள்வாயாக! இன்னும் எனக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பவரை ஆட்சியாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த ஆட்சியாளராக ஆக்கியருள்வாயாக!
மேலும், ஈராக்கை விட்டும் புறப்படுவதற்கு முன்னாள், காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது பொறுப்பினை முதன்னா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதற்குப் பின்னர் பாரசீக மன்னர் மேலும் துணைப்படைகளை ஈராக்கை நோக்கி அனுப்ப ஆரம்பித்தான். கலீபாவின் உடல்நலக் குறைவின் காரணமாக முதன்னா (ரலி) அவர்கள் தலைநகர் மதீனாவிலிருந்து வரக் கூடிய செய்திகளும், தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால் மிகவும் மனமுடைந்து போன முதன்னா (ரலி) அவர்கள் தனது பொறுப்புக்களை பஷீர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மதீனாவை நோக்கிக் கிளம்பினார். அவ்வாறு கிளம்பிய அவர் மதீனாவை அடைந்த பொழுது, அந்த நாள் அபுபக்கர் (ரலி) அவர்களின் இறுதிநாளாக இருந்தது. ஈராக்கின் முழு நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள். உமரே..! நீங்கள் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நாள் எனது இறுதி நாளாக இருக்கக் கூடும் என்றே நான் நினைக்கின்றேன். நான் பகலில் இறந்தால் வரக் கூடிய மாலை நேரத்திலும் இன்னும் இரவில் இறந்தால் வரக்கூடிய அதிகாலை நேரத்திலும், நீங்கள் முஸ்லிம்களின் படையைத் திரட்டி முதன்னா (ரலி) அவர்களின் உதவிக்கு அனுப்பி வையுங்கள். (நான் இறந்து விடுவதால் ஏற்படுகின்ற) எந்த துக்கமும் இறைநம்பிக்கையாளர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையினின்றும், இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய கடமையினின்றும் உங்களைத் தடுத்து விட வேண்டாம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததை விடவா மிகப் பெரிய துன்பம் ஒன்று இனி ஏற்பட்டு விடப் போகின்றது? அந்த நாளில் நான் செய்த கடமைகளை நீங்கள் அறிவீர்கள். இறைவன் மீது சத்தியமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த அந்த நாளில், என்னிடம் மிகச் சிறிய அளவு பலவீனத்தைக் கூட நான் வெளிப்படுத்தியிருந்திருப்பேன் என்று சொன்னால், கருத்து முரண்பாடு காரணமாக மதீனா நகரமே தீப்பற்றி எறிந்து போயிருக்கும்.
இறைவன் தன்னுடைய அருட்கொடைகளின் மூலமாக சிரியாவில் வெற்றி அளித்து விட்டான் என்று சொன்னால், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை நீங்கள் மீண்டும் ஈராக்கிற்கு அனுப்பி வைத்து விடுங்கள். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவராவார், அவர் நாட்டின் முழுமையான நிலையையும் சீர்தூக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடக் கூடியவர் என்றும் கூறினார்கள்.
இன்னும் மரணப்படுக்கையில் இருந்து கொண்டிருந்த நிலையிலேயே, அரசின் கருவூலகத்திலிருந்து நான் எவ்வளவு பணத்தை கடனாகப் பெற்றிருக்கின்றேன் என்று கேட்டார்கள். ஆறாயிரம் திர்ஹம்கள் என்று சொல்லப்பட்டது. குறிப்பிட்ட நிலத்தை விற்று அந்த விற்ற பணம் முழுவதையும் கருவூலகத்தில் ஒப்படைத்து விடும்படிக் கூறினார்கள். அதன்படியே அந்த நிலம் விற்கப்பட்டு, முழுத் தொகையும் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தான் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட நாளிலிருந்து இதுவரை தனக்காகச் சேர்த்துக் கொண்ட சொத்துக்களின் விபரத்தைக் கேட்டார்கள். அவரது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகவும், முஸ்லிம்களின் போர்த்தளவாடங்களை மெருகூட்டுவதற்காக பெறப்பட்ட அடிமையும், தண்ணீர் சுமந்து வருவதற்காக வாங்கப்பட்ட ஒட்டகமும், ஒன்றரை ரூபாய் பணத்திற்குப் பெறப்பட்டதொரு துணியும் உள்ளன என்று கூறப்பட்டது. இவை அனைத்தையும் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கின்ற ஆட்சியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். இவையனைத்தையும் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களது முன்னிலையில் கொண்டு வரப்பட்ட பொழுது, அழுதவர்களாக.. ஓ..! அபுபக்கர் அவர்களே..! உங்களுக்குப் பின்னாள் ஆட்சிப் பொறுப்புக்கு வரவிருக்கின்றவர்களை நீங்கள் நிர்க்கதிக்குள்ளாக்கி விட்டீர்களே..! என்றார்கள்.
இறப்பிற்குச் சற்று முன்னதாக தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஜனாஸாவை எத்தனை துணிகளைக் கொண்டு சுற்றி கபனிடப்பட்டது என்று கேட்டார்கள். மூன்று துண்டுத் துணிகளை வைத்துக் கபனிடப்பட்டது என்று அவர்கள் பதில் கூறிய பொழுது, அதே போன்ற அளவுத் துணிகளைக் கொண்டு என்னைக் கபனிட்டால் போதுமானது என்று கூறினார்கள். அவற்றில் துவைத்து வைக்கப்பட்ட இரண்டு துண்டுகள் ஏற்கனவே நம்மிடம் உள்ளன, அதனை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இன்னுமொரு துண்டை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். இதற்கு, என்னுடைய தந்தையே..! புதிய கபன் துண்டுகளை வாங்க இயலாத அளவுக்கு நாம் ஏழைகளாக இருக்கவில்லையே..! என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தனது தந்தையிடம் கூறினார்கள். புதிய ஆடைகளா..! இறந்த மனிதன் புதிய ஆடைகளை அணிவதை விட உயிருள்ளவர்கள் அணிவதே சிறந்தது என்று பதில் கூறினார்கள். இறந்த உடலைச் சுற்றப்பயன்படும் ஆடை அந்த மனிதனின் சலத்தையும், இரத்தத்தையுமே போர்த்திக் கொண்டிருக்கும் என்றும் கூறினார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தநாளில் மரணமடைந்தார்கள் என்றும் கேட்டார்கள். இதற்கு, 'திங்கட்கிழமை' என்று பதில் கூறப்பட்டதும், நானும் இதே நாளில் மரணமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றேன் என்றார்கள்.
மேலும், தன்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
இறுதியாக, இறைவா..! என்னை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக..! இன்னும் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வாயாக..! என்றும் பிரார்த்தித்தார்கள். இதுவே, அவர்களது வதனத்திலிருந்து வெளிவந்த இறுதி வார்த்தைகளாகவும் அமைந்தன. அவர்கள் நினைத்தது போலவே, 22, ஜமாதுல் ஆகிர் மாதம் திங்கட்கிழமை அன்று மக்ரிப் மற்றும் இஷா நேரத்திற்கிடையே மரணமடைந்தார்கள். இன்னா லில்லாhஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது.
ஜனாஸா நல்லடக்கத் தொழுகையை உமர் (ரலி) அவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அன்றைய இரவே ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அடக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கு மிக அருகில், தன்னுடைய தலைவருக்கு மிக அருகிலேயே அவரின் உற்ற நண்பரும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணமடைந்த பொழுது அவருக்கு 63 வயதாகியிருந்தது.
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள், பதினொரு நாட்கள் கழித்து மரணத்தைச் சந்தித்தார்கள்.
நபி வழியில் நம் துஆக்கள்
أسْتَغْفِرٌاللهَ أسْتَغْفِرٌاللهَ أسْتَغْفِرٌاللهَ اللَّهُمَّ أَنْتَ السَّلامُ ، ومِنكَ السَّلامُ ، تباركْتَ يَاذا الجلالِ والإكرام
அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுகிறேன்(3 முறை) யா அல்லாஹ்! நீயே சாந்தி அளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படும். மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமானவன். நூல்: 931
لا إلهَ إلاَّ اللَّه وحْدَهُ لا شَرِيكَ لَهُ ، لهُ المُلْكُ ولَهُ الحَمْدُ ، وهُوَ عَلى كُلِّ شَيءٍ قَديرٌ . اللَّهُمَّ لا مانِعَ لما أعْطَيْتَ ، وَلا مُعْطيَ لما مَنَعْتَ ، ولا ينْفَعُ ذا الجَدِّ مِنْكَ الجدُّ
வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். யா அல்லாஹ்! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது.(நூல்: புகாரி 844, 6330)
لا إلَه إلاَّ اللَّه وَحْدَهُ لا شريكَ لهُ ، لهُ الملكُ ولهُ الحَمْدُ ، وهُوَ عَلى كُلِّ شيءٍ قَديرٌ . لا حوْلَ وَلا قُوَّةَ إلاَّ بِاللَّه ، لا إله إلاَّ اللَّه ، وَلا نَعْبُدُ إلاَّ إيَّاهُ ، لهُ النعمةُ ، ولَهُ الفضْلُ وَلَهُ الثَّنَاءُ الحَسنُ ، لا إله إلاَّ اللَّه مُخْلِصِينَ لَهُ الدِّينَ ولوْ كَرِه الكَافرُون
வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன்.(பாவத்திலிருந்து திரும்புதலோ நன்மையைச் செய்ய) சக்தியோ அல்லாஹ்வை கொண்டல்லாது இல்லை.வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்.அருட்கொடையும், உயர்வும், அழகிய புகழும் அவனுக்கே.காஃபிர்கள் வெறுத்த போதிலும், முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. (நூல்: முஸ்லிம்)
اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ والْبُخلِ وَأَعوذُ بِكَ مِنْ أنْ أُرَدَّ إلى أرْذَل العُمُرِ وَأعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيا ، وأَعوذُ بِكَ مِنْ فِتْنَةِ القَبر
யா அல்லாஹ்! கோழத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தள்ளாத வயதுவரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.(நூல்: புகாரி 2822)
اللَّهُمَّ أعِنِّي على ذِكْرِكَ ، وشُكْرِكَ ، وَحُسنِ عِبادتِكَ
யா அல்லாஹ்! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!(நூல்: அபூதாவூத்)
سُبْحَانَ الله اَلْحَمْدُ لِلّه اَللهُ أكْبَرْ
சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹ் அக்பர் 33 (மற்றொரு அறிவிப்பில் அல்லாஹ் அக்பர் 34 தடவை என்றும் உள்ளது) தடவையும். ஆக மொத்தம் 99 தடவைக்குப்பின் 100 வதாக
لا إلهَ إلاَّ اللَّه وحْدَهُ لا شَرِيكَ لَهُ ، لهُ المُلْكُ ولَهُ الحَمْدُ ، وهُوَ عَلى كُلِّ شَيءٍ قَديرٌ
எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(நூல்: முஸ்லிம்)
வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே.
வீட்டிலிருந்து புறப்படும்போது ஓதும் துஆبِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِِالله
அல்லாஹ்வின் பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது.(நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ)
اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِكَ أَنْ أَضِـلَّ أَوْ أُضَـل ، أَوْ أَزِلَّ أَوْ أُزَل ، أَوْ أَظْلِـمَ أَوْ أَُظْلَـم ، أَوْ أَجْهَلَ أَوْ يُـجْهَلَ عَلَـيّ
யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது வழி தவறச் செய்யப்படல், அல்லது பிசகிவிடுதல், அல்லது நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது நான் அந்நிதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான் அறிவீனாக ஆகிவிடல் அல்லது அறிவீனனாக ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் காவல் தேடுகிறேன்.(நூல்கள்: சஹீஹ் திர்மிதீ, ஸஹீஹ் இப்னுமாஜா)
வீட்டினுள் நுழையும்போது ஓதும் துஆ
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا
அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே புறப்படுவோம்; நம்முடைய இரட்சகனின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
பிரயாணத்தின்போது ஓதும் துஆسبْحانَ الذي سخَّرَ لَنَا هذا وما كنَّا له مُقرنينَ، وَإِنَّا إِلى ربِّنَا لمُنقَلِبُونَ . اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ في سَفَرِنَا هذا البرَّ والتَّقوى ، ومِنَ العَمَلِ ما تَرْضى . اللَّهُمَّ هَوِّنْ علَيْنا سفَرَنَا هذا وَاطْوِ عنَّا بُعْدَهُ ، اللَّهُمَّ أَنتَ الصَّاحِبُ في السَّفَرِ ، وَالخَلِيفَةُ في الأهْلِ. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وعْثَاءِ السَّفَرِ ، وكآبةِ المنظَرِ ، وَسُوءِ المنْقلَبِ في المالِ والأهلِ وَالوَلدِ
அல்லாஹ் மிகப்பெரியவன். இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா அல்லாஹ்! எங்களின் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா அல்லாஹ்! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.(நூல்: முஸ்லிம் 2392)
பிரயாணத்திலிருந்து திரும்பும்போது ஓதும் துஆآيِبونَ تَائِبونَ عَابِدُون لِرَبِّنَا حَامِدُونَ
யாஅல்லாஹ்! இதில் நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.(நூல்: முஸ்லிம் 1496)
கழிவரையில் நுழைகின்றபோதுبِسْمِ الله ) اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث )
யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி, முஸ்லிம்
கழிவரையிலிருந்து வெளியேறுகின்றபோது
غُفْـرانَك
உன்னிடம் பாவம் பொருத்தருள வேண்டுகிறேன். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
உளுச் செய்தபின்
أَشْهدُ أَنْ لا إِله إِلاَّ اللَّه وحْدَه لا شَريكَ لهُ، وأَشْهدُ أَنَّ مُحمَّدًا عبْدُهُ وَرسُولُه
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்)இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன். நூல்: முஸ்லிம்
اللَّهُمَّ اجْعلْني من التَّوَّابِينَ واجْعلْني مِنَ المُتَطَهِّرِينَ
யாஅல்லாஹ் பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக! நூல்: திர்மிதீ
பள்ளிவாசலுக்குள் நுழையும்போது
أَعوذُ باللهِ العَظيـم وَبِوَجْهِـهِ الكَرِيـم وَسُلْطـانِه القَديـم مِنَ الشّيْـطانِ الرَّجـيم،[ بِسْـمِ الله، وَالصَّلاةُ] [وَالسَّلامُ عَلى رَسولِ الله]، اللّهُـمَّ افْتَـحْ لي أَبْوابَ رَحْمَتـِك. رواه ابو داود
யா அல்லாஹ்! உனது அருள் வாசல்களை எனக்காக திறப்பாயாக!
பள்ளிவாசல் விட்டு வெளியேறும்போது
بِسمِ الله وَالصّلاةُ وَالسّلامُ عَلى رَسولِ الله، اللّهُـمَّ إِنّـي أَسْأَلُكَ مِـنْ فَضْـلِك، اللّهُـمَّ اعصِمْنـي مِنَ الشَّيْـطانِ الرَّجـيم. رواه مسلم وابن ماجه
யா அல்லாஹ்! நிச்சயமாக உனது பேரருளை வேண்டுகிறேன். நூல்: முஸ்லிம்
எனக்கு ஒரு நண்பன் இருந்தான்
(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
''நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?'' என்றும் கேட்டான்.)
(அவ்வாறு கூறியவனை) ''நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?'' என்றும் கூறுவார்.
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
(அவனிடம்) ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
''என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
''(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா?
''(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்'' என்று கூறுவார்.
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
(அல்குர்ஆன் 37:51-61)
அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?'' எனக் கூறுவான்.
''எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?''
''நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான!'' (என்று புலம்புவான்.)
(அல்குர்ஆன்: 25:27-29)
பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.
(அல்குர்ஆன்:43:67)
எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
எதுவரை யென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்); ''ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!'' (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்'' என்று கூறுவான்.
(அப்போது) ''நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்'' (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
(அல்குர்ஆன்:43:36-39)
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
(அல்குர்ஆன்:44:41-42)
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்).
(அல்குர்ஆன்:70:10-11)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி). ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும். (ஆதாரம் : அபூதாவூது).
மறுமை நாளில் அல்லாஹுத்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான். (முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதன் சிறப்பு..
''ஒருவர் தன் பிரார்த்தனையின் போது அல்லாஹ்வைப் புகழாமல், நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து அவரிடமோ, அல்லது மற்றவரிடமோ, ''உங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தால் முதலில் தன் இறைவனைப் புகழ ஆரம்பிக்கட்டும். பின்பு என் மீது ஸலவாத் கூறட்டும்! பின்னர் தான் விரும்பியதை கேட்கட்டும்'' என்று கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ)( ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூ முஹம்மத் என்ற கஹ்ப் இப்னு உஜ்ரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு ஸலாம் எப்படிக் கூறுவது?'' என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் மீது எப்படி ஸலவாத் கூறுவது? என்று கேட்டோம் ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்! அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்'' என்று கூறுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஸலவாத்தின் பொருள்: இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்பத்தார் மீது நீ அருள் புரிந்தது போல், நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக! நீயே புகழுக்குரியவன், தகுதிக்குரியவன் ஆவாய். (ரியாளுஸ்ஸாலிஹீன்)
.gif)