அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Saturday, November 29, 2008

தாய், தந்தையர்

தாய், தந்தையர்

ஒருவர் நபி அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி "அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா

தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி

ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." அல்குர்ஆன் 31:14

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244

பெண்கள்

எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல:முஸ்னது அஹமது ஹதீஸ் எண் 1957

அவர்களில் (1400 ஆண்டுகளுக்குமுன் மக்காவாசிகளின்) ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாறாயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது; அவன் கோபமடைகிறான்.

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.

எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோஇ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? அல்குர்ஆன் 16:58,59

எவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து அவர்களை நன்முறையில் வளர்ப்பாரோ, அவரை அவர்கள் நரகிலிருந்து காப்பற்றுவார்கள். நூல்: முஸ்லிம்

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். அல்குர்ஆன் 17:31

அன்று பெண் குழந்தை பிறந்தவுடன் உயிரோடு புதைத்தார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பிறப்பதற்கு முன்பே ஆணா, பெண்ணா என்றறிந்து பெண்ணாயிருந்தால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். உண்மையில் இதுவும் ஒரு ந்க ஹ்லைதான்.

அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் "அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?" முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்" என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்!

பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ

பெற்றோரின் திருப்தி

பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபி கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபி பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி

பெற்றோரை பேணுதலும் ஜிஹாத்

ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன் என்று கூறினார். உனக்கு தாய் உண்டா? என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)

அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹவின் பொருத்தத்தை பெருவோமாக!
அபூஃபைஸல்நன்றி -அதிரை போஸ்ட்

நல்லறங்கள் தீயவைகளை அழித்து விடும்

1758. ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றி விடும்'' (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் 'இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?' என்று கேட்டதற்கு 'என் சமுதாயம் முழுமைக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
புஹாரி :526 இப்னு மஸ்ஊது (ரலி).


1759. நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருமனிதர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றை செய்து விட்டேன். எனவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். எனவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (தொழுதேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் அல்லாஹ் 'உம்முடைய பாவத்தை' அல்லது உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்றார்கள்.
புஹாரி :6823 அனஸ் (ரலி).

Wednesday, November 26, 2008

அல்லாஹ்வின் இரக்கம் அவனின் கோபத்தை மிகைத்தது..

1749. அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய ('லவ்ஹுல் மஹ்ஃபூழ்' என்னும்) பதிவேட்டில் - அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது - 'என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது'' என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3194 அபூஹுரைரா (ரலி).

1750. அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6000 அபூஹுரைரா (ரலி).

1751. (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!'' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று கூறினார்கள்.
புஹாரி :5999 உமர் (ரலி).

1752. (முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒருவர் 'நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைக் கரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனெனில், இறைவன் மீதாணையாக! என் மீது இறைவனுக்கு சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாவரும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்து விடுவான்'' என்று சொல்லி(விட்டு இறந்து) விட்டார். (அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு சாம்பல் தூவப்பட்டது.) பிறகு, அல்லாஹ் கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரின் உடலை ஒன்று திரட்டினான். தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்தும் அவரின் உடலை ஒன்று திரட்டினான். பிறகு, 'நீ எதற்காக இப்படிச் செய்தாய்?' என்று கேட்டான். அதற்கு அவர், 'உன் அச்சத்தினால் தான். நீ நன்கறிந்தவன்'' என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7506 அபூஹுரைரா (ரலி).

1753. உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒருவர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்டபோது தன் மகன்களிடம், 'உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்'' என்று கேட்டார். அவர்கள், 'சிறந்த தந்தையாக இருந்தீர்கள்'' என்று பதில் கூறினர். அதற்கு அவர், 'நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. எனவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்'' என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரின் உடல் அணுக்களை) அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) 'இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?' என்று கேட்டான். அவர், 'உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் (இப்படி உத்திரவிட என்னைத் தூண்டியது)'' என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அவன் அரவணைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3478 அபூ ஸயீத் (ரலி).

மரணத்திற்குபின் சேரும் அமல்கள்...

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:---
1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி 'என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் 'சதக்கா' (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)

வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் "என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் 'சதக்கா' செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்

மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.

இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.

அன்புச் சகோதரர்களே! மேற்கூறிய நபிமொழிகளில் கூறப்பபட்டிருப்பவைகளில் தான், நாம் இறந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)

அல்லாஹ் நம் அனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக!

Tuesday, November 25, 2008

தவ்பாவின் சிறப்பு

தவ்பா (பாவ மீட்சி)

1746. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி

என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7405 அபூஹுரைரா (ரலி).


1747. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் 'கடுமையான வெப்பமும் தாகமும்' அல்லது 'அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று' ஏற்பட்டது. அவன், 'நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்'' என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6308 இப்னு மஸ்ஊத் (ரலி).


1748. உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6309 அனஸ் (ரலி).

ஃதிக்ரின் சிறப்பு

அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது ( அல்குர்ஆன் : 29:45 )

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். ( அல்குர்ஆன் : 2:152 )

(நபியே) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! ( அல்குர்ஆன் : 7:205 )

அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!
( அல்குர்ஆன் : 62:10 )

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! ( அல்குர்ஆன் : 33:41,42 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''இரண்டு வார்த்தைகள் உண்டு. அவை நாவிற்கு (கூற) எளிதானது, தராசில் (நன்மையால்) கனமானது, இறைவனுக்கு விருப்பமானதும் ஆகும். (அவை) 1) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி 2) சுப்ஹானல்லாஹில் அளீம்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

பொருள்:
1) அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்
2) கண்ணியமிக்க அல்லாஹ்வை துதிக்கிறேன் ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1408 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, வலாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்'' என்று நான் கூறுவது, சூரியன் உதிக்கும் (பூமியில் கிடைக்கும்) பொருட்கள் (எனக்கு கிடைப்பதை) விட எனக்கு மிக விருப்பமானதாகும் என்று நபி(ஸல்)கூறினார்கள். (முஸ்லிம்)


(பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். அவனுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அல்லாஹ்வே மிகப் பெரியவன்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1409 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

ஒருவர், ''லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீகலஹுலஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்;'' என்று ஒரு நாளைக்கு நூறு தடைவ கூறினால், பத்து அடிமைகளை உரிமை விட்ட நன்மை அவருக்கு உண்டு. அவருக்கு 100 நன்மைகள் எழுதப்படும். அவரை விட்டும் 100 தீமைகள் அழிக்கப்படும். அந் நாளில் மாலை வரை ஷைத்தானை விட்டும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அவரை விட அதிகமாக நற்செயல் செய்தவரைத் தவிர, வேறு எவரும் இவர் கொண்டு வந்ததைவிட மிகச்சிறந்த ஒன்றை கொண்டு வந்தவராக மாட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

மேலும், ''சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி'' என்று ஒரு நாளில் நூறு தடவைக் கூறினால், அவரின் குற்றங்கள் கடல் நுரை அளவுக்கு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1410 )

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஸலவாத் சொல்லுங்கள்

ஃபழாலா இப்னு உபைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவர் தன் பிரார்த்தனையின் போது அல்லாஹ்வைப் புகழாமல், நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து அவரிடமோ, அல்லது மற்றவரிடமோ, ''உங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தால் முதலில் தன் இறைவனைப் புகழ ஆரம்பிக்கட்டும். பின்பு என் மீது ஸலவாத் கூறட்டும்! பின்னர் தான் விரும்பியதை கேட்கட்டும்'' என்று கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1404 )

அபூ முஹம்மத் என்ற கஹ்ப் இப்னு உஜ்ரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு ஸலாம் எப்படிக் கூறுவது?'' என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் மீது எப்படி ஸலவாத் கூறுவது? என்று கேட்டோம் ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்! அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்'' என்று கூறுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஸலவாத்தின் பொருள்:
இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்பத்தார் மீது நீ அருள் புரிந்தது போல், நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக! நீயே புகழுக்குரியவன், தகுதிக்குரியவன் ஆவாய்.
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1405 )

அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் : 33:56)

அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''(நபியாகிய) என்மீது ஒருவர் ஒரு தடவை ''ஸலவாத்'' கூறினால், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ''ஸலவாத்'' கூறுகின்றான் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1397 )

அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நாட்களில் மிகச்சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். எனவே அன்று என்மீது ஸலவாத் அதிகம் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத், என்னிடம் எடுத்துக் காண்பிக்கப்படுகிறது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! நீங்கள் மண்ணோடு மண்ணான நிலையில் எங்களின் ஸலவாத் எப்படி எடுத்துக் காண்பிக்கப்படும்'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''நிச்சயமாக நபிமார்களின் உடல்களை (சாப்பிட) பூமிக்கு அல்லாஹ் தடை செய்து விட்டான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1399 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''என் புதைகுழியை (கப்ரை) விழா கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். என் மீது ஸலவாத் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத், நீங்கள் எங்கு இருந்தாலும் என்னை வந்து சேரும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1401 )

அல்லாஹ்வை புகழ்தல், அவனுக்கு நன்றி செலுத்துதல்

அல்லாஹ் கூறுகிறான் :


'என்னை நினையுங்கள் நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!'' (அல்குர்ஆன் : 2:152)


''நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது.'' (அல்குர்ஆன் : 14:7)


''சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!(அல்குர்ஆன் : 17:111)


''அல்லாஹ்வே! நீ தூயவன்'' என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. ''அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும். (அல்குர்ஆன் : 10:10)


அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:''ஓர் அடியான் உணவைச் சாப்பிட்டு, அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறான். மேலும் தண்ணீர் குடித்து விட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறான். இந்த அடியானைக் கண்டு அல்லாஹ் திருப்தியுறுகின்றான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1396 )

Monday, November 24, 2008

குகை வாசிகள் மூவர் வரலாறு

1745. ''(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், 'நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றனர். அவர்களில் ஒருவர், 'இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. மற்றொருவர், 'இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை விட்டு நீக்கு' எனக் கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான். மற்றொருவர், 'இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு' எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2215 இப்னு உமர் (ரலி).

Sunday, November 23, 2008

ஹதித்

1743. நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5196 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

1744. (பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5096 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

“இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண்ணத்தோடு ஒருவன் இல்மைக் கற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டால், சுவனத்தில் அவனுக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரு சிறு அளவிலான வித்தியாசமே தென்படும்.”,
என முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தனர்.
[அறிவிப்பாளர்: இமாம் அல் ஹஸன் அல் பஸரி, நூல்: திர்மிதி, எண்: 249]


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
” நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.”
மேலும் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாக நான் எண்ணுவதாவது,

” ஒரு மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்கு பொறுப்பாளியாவான். அவனே அதைப் பாதுகாப்பவனும் ஆவான். எனவே நீங்கள் அனைவரும் தமக்கு கீழுள்ள குழந்தைகளுக்கும், செல்வத்திற்கும் பொறுப்பாளி ஆவீர்கள்” (புகாரி தொகுதி : 3, புத்தகம் : 41, எண் : 592)

ஸஹல் பின் ஸா’த், ஜாபிர் பின் அப்தில்லாஹ், மற்றும் அலீ பின் அபி தாலிப் (ரதியல்லாஹுஅன்ஹும்) அறிவிக்கிறார்கள் : நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள் , ” ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) என்னிடத்தில் வந்து,
‘ முஹம்மதே, நீங்கள் விரும்புகின்ற வரை வாழ்ந்து கொள்ளுங்கள், ஏனெனில், கண்டிப்பாக நீங்கள் மரணிப்பீர்கள்;
யாரை வேண்டுமானாலும் நேசியுங்கள், ஏனெனில், கண்டிப்பாக அவரை நீங்கள் பிரிவீர்கள்;
எந்த காரியமாகிலும் செய்யுங்கள், ஆனால் கண்டிப்பாக அதற்குண்டான தீர்ப்பை சந்திப்பீர்கள்;
மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ‍ ஒரு நம்பிக்கையாளனின் மேன்மை, அவனின் இரவு வணக்கத்தில் / ஃகியாமில் உள்ளது, மற்றும் அவனது கண்ணியம், அவன் பொருளுதவிக்காக மற்றவர்களை எதிர்பாராமல் வாழ்வதில் உள்ளது’
என்று கூறினார்”.
[ அத் தபரானி அவர்கள் 'அல் அஸ்வத்'தில் பதிவு செய்துள்ளார். பைஹகீயின் நூலிலும், இன்னும் பலரின் நூலிலும் உள்ளது. அல்பானீ அவர்கள் தன்னுடைய 'அஸ் ஸஹீஹாஹ்' நூலில் (பக்கம்-831) 'ஹஸன்' தரமுள்ளது என பதிவு செய்துள்ளனர்]

குர்ஆன் துஆக்கள்


“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (2:197)
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ
ரப்பனா தஃகப்பல் மின்னா இன்னக அன்த ஸமீயுல் அ’லீம்


“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (2:128)
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
ரப்பனா வஜ்’அல்னா முஸ்லிமய்னி லக வ மின் ஜுர்ரியத்தினா உம்மதன் முஸ்லிமதன்லக வ ‘ஆரினா மனாஸிக்னா வ துப் ‘அலய்னா இன்னக அன்த தவ்வாபுர் ரஹீம்

“ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” (2:201)
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனதன் வ ஃஃபில் ‘ஆகிரதி ஹஸனதன் வஃகீனா அஜாபன் நார்

“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” (2:250)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَரப்பனா அஃப்ரிக் ‘அலய்னா சப்ரன் வ த்சப்பித் அக்தாமனா வன் சுர்நா அலல் ஃகவ்மில் காஃபிரீன்

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!”رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَاரப்பனா லா துவா ஃகிஜ்நா இன் நசீனா அவ் அஃக்தானா

“எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!”
رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا
ரப்பனா வ‌லா தஹ்மில் ‘அலய்னா இஸ்ரன் கமா ஹமல்தனா அல்த் தீன மின் ஃகப்லினா

“எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (2:286)
رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا
فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
ரப்பனா வலா துஹம்மில்னா மா லா தாஃகத லனா பிஹி வஆஃபு அன்னா வக்ஃபிர் லனா வர்ஹம்னா அன்த மௌலானாஃபன்சுர்னா ‘ஆலா அல்ஃகவ்மி அல் காஃபிரீனா

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (3:8)
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
ரப்பனா லா துஜிக் ஃகுலூபுனா ப’த இஜ் ஹதய்தனா வ ஹப்லனா மின் ல‌துன்க ரஹ்மத்தன் இன்னக அன்தல் வஹ்ஹாப்

“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (3:9)رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
ரப்பனா இன்னக ஜாமி’உன் நாஸி லி யவ்மின் லா ரய்ப ஃபீஹீ இன்னல்லாஹ லா யுஃக்லிஃபுல் மீ ‘ஆத்

”எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” (3:16)رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِரப்பனா இன்னனா ஆமன்னா ஃபாக் ஃபிர்லனா ஜுனூபனா வ‌ கீனா அஜா பன் நார்

Tuesday, November 18, 2008

உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ..

1734. 'நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் 'யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்' என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது 'நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் 'இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்' என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்''.
புஹாரி :247 பராவு இப்னு ஆஸிப் (ரலி) .


1735. நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ª ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.

(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6320 அபூஹுரைரா (ரலி).


1736. நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்து வந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்து விடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7383 இப்னு அப்பாஸ் (ரலி).


1737. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.

(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
புஹாரி :6398 அபூமூஸா (ரலி).


1738. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப்போரில் எதிரிகள் தோல்வியுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும் போது) 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்த எதிர்) அணியினரை அவனே தனியாக வென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப் போவது) இல்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4114 அபூஹூரைரா (ரலி).

Monday, November 17, 2008

தாழ்ந்த குரலில் இறைவனை அழைத்தல்

1728. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்'' என்று கூறினார்கள். அப்போது, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு, இருந்து கொண்டு, 'லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!'' என்று அழைத்தார்கள். 'கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று கூறினார்கள். நான், 'சரி (கட்டாயம் கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினேன். (அந்த வார்த்தை,) 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' - அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4202 அபூமூஸா அல் அஷ்அரி (ரலி).


1729. என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது 'இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :834 அபூபக்ர் அஸ்ஸித்திக் (ரலி).


1730. அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓத வேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதியிழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க மாட்டார். எனவே, எனக்கு உன் தரப்பிலிருந்து (பாவ) மன்னிப்பை வழங்குவாயாக. நீயே அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கிறாய்!'' என்று கூறுங்கள் என்றார்கள்.
புஹாரி : 7387 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).


1731. நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்திப்பவர்களாய் இருந்தார்கள்; அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ர், அல்லாஹும்ம மஸீஹுத் தஜ்ஜால், அல்லாஹும்மஃக் ஸில் கல்பீ பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமாநக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மிஷ்ரிக்கி வல் மஃக்ரிப். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்மஃஸமி, வல்மஃக்ரம்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் சோதனையிலிருந்தும், நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், செல்வச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும், பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நான் (மகாபொய்யன்) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியின் நீராலும் ஆலங்கட்டியின் நீராலும் என் உள்ளத்தைக் கழுவிடுவாயாக! அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தை நீ தூய்மைப்படுத்துவாயாக! மேலும், கிழக்கிற்கும் மேற்கிற்கும்இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக! இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், பாவத்திலிருந்தும் கடனிலிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.
புஹாரி : 6377 ஆயிஷா (ரலி).


1732. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்ஹரம். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மாமத்'' என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
புஹாரி : 6367 அனஸ் (ரலி).


1733. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.
புஹாரி :6347 அபூஹூரைரா (ரலி).

Sunday, November 9, 2008

திக்ரின் சிறப்புகள்..

1724. ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் - லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3293 அபூ ஹுரைரா (ரலி).


1725. 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஏன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6405 அபூஹுரைரா (ரலி).


1726. லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூல்முல்க்கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்).
புஹாரி : 6404 அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி).


1727. இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6406 அபூஹூரைரா (ரலி).

வீரம் குடிகொண்ட நெஞ்சம்

அது ஒரு பெரிய வீடு!பெரிய பெரிய அறைகளைக் கொண்டதாகவும் உயரமானதாகவும் இருந்தது.வீடு என்று சொல்வதைவிட பெரிய அரண்மனை என்றுதான் சொல்லவேண்டும்.ஏராளமான பெண்கள் அங்கு இருந்தார்கள்.குழந்தைகளும் நிரம்பி இருந்தார்கள்.எல்லோரும் மதீனா நகரத்தைச் சேர்ந்தவர்கள்: முஸ்லிம்கள்.மதீனாவில் சந்தோஷமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டிவிடவேண்டும் என்று இஸ்லாமிய விரோதிகள் படை எடுத்து இருந்தார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போர் அது!அகழ்ப் போர் அதாவது அஹ்ஸாப் போர் என்று அதற்குப் பெயர்.ஆண்கள் எல்லாம் போர்க்களத்திற்கு சென்றுவிட்டார்கள்.பெண்களையும் குழந்தைகளையும் போருக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது அல்லவா?எனவே அவர்களை எல்லாம் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள்.ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழியல்லாஹூ அன்ஹூ) என்று வயதான ஒரு ஸஹாபி அவரைக் காவலுக்கு வைத்திருந்தார்கள்.உள்ளே பெண்களில் ஸஃபிய்யா என்ற ஒரு ஸஹாபிய்யா இருந்தார்கள்.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்களுடைய அத்தை! மிகவும் வீரமுள்ள பெண்!!அன்றைக்கும் சரி, இன்iறைக்கும் மிகப் பெரிய எதிரிகள் யார் என்றால் யூதர்கள் தாம்!!யூதன் ஒருவன் பெண்களும் குழந்தைகளும் எங்கே தங்கவைக்கப் பட்டுள்ளார்கள். என்பதைப் பார்ப்பதற்காக மதீனா வீதிகளில் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தான்.பாதுகாப்பு குறைவாக இருந்தால் பெண்களைத் தாக்கலாம் என்பது யூதர்களின் திட்டம்!இஸ்லாமிய எதிரிகள் எப்போதும் ஆதரவு அற்ற பெண்களையும் குழந்தைகளையும் மட்டுமே தாக்குகிறார்கள்.

எப்படியோ ஒருவழியாக பெண்கள் இருக்கும் இடத்தை அவன் கண்டுபிடித்துவிட்டான்.அந்த வீட்டை அவன் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தான்.யாரோ ஒருவன் உளவு பார்க்க வந்துள்ளான் என்பது ஸஃபிய்யா அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.அவர்கள் காவல் காத்துக் கொண்டிருந்த ஹஸ்ஸானை எச்சரித்தார்கள்.யாரோ ஒருவன் வெளியே நின்று கொண்டுள்ளான். என்ன ஏது என்று பார்த்து எதிரிதான் என்றால் தீர்த்துக் கட்டிவிடுங்கள்!!----என்று கூறினார்கள். ஹஸ்ஸான் வெளியே போய்ப் பார்த்தார். யாரையும் காணவில்லை. திரும்பி வந்துவிட்டார்.மீண்டும் யாரோ நடமாடுவது போல சத்தம் கேட்டது.மறுபடியும் ஸஃபிய்யா ரழியல்லாஹூ அன்ஹா ஹஸ்ஸான் அவர்களை எச்சரித்தார்கள்.ஹஸ்ஸான் மறுபடியும் வெளியே யாரையும் பார்க்காமல் திரும்பி வந்துவிட்டார்.ஸஃபிய்யா அவர்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை.உண்மையிலேயே எதிரி எவனாவது வந்திருந்தால் என்ன ஆகும்? என்று பயந்தார்கள்.பெண்களுக்கு ஆபத்து வந்துவிடுமே என்று யோசித்தார்கள்.

கடைசியாக தாமே சென்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்கள்.ஹஸ்ஸானுக்குத் தெரியாமல் வெளியே சென்று விட்டார்கள்.அங்கே போய்ப் பார்த்தால் ஓர் இடத்தில் யூதன் ஒருவன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.வாளை ஓங்கிக் கொண்டு அவனை நோக்கி ஸஃபிய்யா பாய்ந்தார்கள்.ஒரே வெட்டு! அவன் கதை முடிந்தது.எதிரி ஒழிந்தான். நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள் ஸஃபிய்யா!அமைதியாக உள்ளே திரும்பினார்கள்.ஹஸ்ஸான் அவர்களே! வெளியே எதிரி செத்துக் கிடக்கிறான்.போய் அவனுடைய உடலை அகற்றி விடுங்கள்!---என்று கூறினார்கள்.அங்கே அந்த யூதனை அனுப்பியவர்கள்.அவன் திரும்பி வருவான்: அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.சென்றவன் சென்றவன் தான் திரும்பி வந்தபாடில்லை.ஆஹா! ஏதோ அசம்பாவிதம் ஆகிவிட்டது. சென்றவனைக் காணவில்லை.ஒருவேளை அவனுடைய கதையை முஸ்லிம்கள் முடித்து விட்டார்கள் போலிருக்கின்றது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.பெண்களைப் பாதுகாக்கும் படை ஒன்றும் மதீனா நகரில் இருக்கின்றது. அந்த படையினர் தாம் நாம் அனுப்பியவனைக் கொன்றுவிட்டார் என்று அவர்கள் நம்பிவிட்டார்கள்.இறைநம்பிக்கை-ஈமான் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருந்தால் இறைவனுடைய அச்சம் ஒன்று மட்டும் உள்ளத்தில் வேறூன்றிப் பாய்ந்திருந்தால் ஸஃபிய்யா அவர்களைப் போல நாமும் வீரப் பெண்மணியாக மாறலாம்:இஸ்லாமியப் பணியில் சாதித்துக் காட்டலாம்!அல்லாஹ்வுடைய அன்பை அள்ளிக் கொள்ளலாம்.

உயர்ந்த உள்ளம்

அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்.அல்லாஹ்வின் பிரியத்தைச் சம்பாதித்துக்கொண்ட ஒரு நபித்தோழர்.அப்துல்லாஹ் பார்வை அற்றவர் பிறக்கும்போதில் இருந்தே அவருக்குக் கண் தெரியாது.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்கள் அப்துல்லாஹ்வை மதீனத்து பள்ளிவாசலில் முஅத்தின் ஆக நியமித்து இருந்தார்கள்.பள்ளிவாசலில் தொழுகைக்காக பாங்கு சொல்கிறாரே அவர்தான் முஅத்தின். மோதினார் என்று அவரைச் சொல்லக்கூடாது.மதீனா பள்ளிவாசலில் இரண்டு முஅத்தின்கள் இருந்தார்கள்.ஒருவர் பிலால்: இன்னொருவர் அப்துல்லாஹ் இகாமத் சொல்வார்.தொழுகைக்கு கொஞ்சநேரத்துக்கு முன்பாக கொடுக்கப்பட்டால் பாங்கு!தொழுகைக்காக நின்றபின்பு கொடுக்கப்பட்டால் இகாமத்!

முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்று பலமுறை எதிரிகள் படை எடுத்துவந்தார்கள்.ஸஹாபாக்கள் போருக்காக சென்றுவிடும் போது அப்துல்லாஹ் மதீனாவிலேயே தங்கி இருப்பார்.தற்காலிக தலைமைப் பொறுப்பில் அவரையே இறைத்தூதர்; நியமிப்பார்கள்.ஆனாலும் அவருக்கு மிகவும் கவலையாகவும் ஆதங்கமாகவும் இருக்கும்.ஜிஹாதில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்படுவார்.ஜிஹாதுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே தங்கிவிட்டவர்கள்.முஜாஹிதீன்களை விட மட்டமானவர்கள்: தரத்தில் குறைந்தவர்கள் என்று எல்லாம் அல்குர்ஆன் வசனங்கள் இறங்கும்போது அவருடைய உள்ளம் அப்படியே துடிக்கும்! கண்கள் குளமாகி விடும்!உடல் குறைபாடுகளால், தவிர்க்க முடியாத காரணங்களால் போருக்குப் போகாமல் விட்டவர்கள் மீது குற்றமில்லை என்று அப்துல்லாஹ்வுக்காகவே ஒரு வசனம் இறங்கியது.அப்போதும் அவர் மனம் ஆறவில்லை.முஜாஹிதீனாக மாற முடியவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டே தான் இருந்தார்.உயர்ந்த உள்ளங்கள் சாதாரண செயல்களால் திருப்தி அடைவதே இல்லை.உயர்ந்த உள்ளங்கள் சிகரத்தில் வீற்று இருப்பதையே விரும்புகின்றன!கண் தெரியாவிட்டாலும் பரவாயில்லை: ஜிஹாதில் கலந்துகொண்டே தீருவது என்ற முடிவுக்கு அப்துல்லாஹ் வந்துவிட்டார்.இரண்டாம் கலீஃபா உமருடைய காலத்தில் ஈரான் நாட்டினரோடு சண்டை நடைபெற்றது.இன்று அமெரிக்கா போன்று அன்று ஈரான் ஒரு வல்லரசு.படுபயங்கரமான போர் அது! காதிஸிய்யா போர் என்று அதற்குப் பெயர்.அந்தப் போரில் அப்துல்லாஹ் கலந்து கொண்டார்.இரண்டு அணிகளுக்கு இடையே என்னை நிறுத்திவிடுங்கள்!முஸ்லிம்படையின் கொடியை என்னிடம் கொடுத்துவிடுங்கள்.நான் எங்கும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருப்பேன்!கண் தெரியாத என்னால் எங்குமே நகரமுடியாது!முஸ்லிம்களின் கொடி உயர்ந்தே இருக்கும்!!----என்று அப்துல்லாஹ் கூறினார்.ஜிஹாதுக்கான பெயர்ப் பட்டியலில் தன்னுடைய பெயரையும் கொடுத்தார்.

சஅத் இப்னு அபீ வக்காஸ் என்ற வீர ஸஹாபியின் தலைமையில் படை கிளம்பியது.பெரும் அமர்க்களத்தோடு போர் நடைபெற்றது. இரண்டு நாட்கள் போர் தொடர்ந்தது.இறுதியில் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைத்தது!ஏராளமான ஸஹாபாக்கள் ஷஹீத் ஆனார்கள்!இறந்துபோன ஷூஹதாக்களின் உடல்களிடையே அப்துல்லாஹ்வின் உடலும் கிடந்தது.முஸ்லிம்களின் வெற்றிக்கொடியை ஏந்தியவாறு அப்துல்லாஹ் வீழ்ந்து கிடந்தார்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!இறைவனுடைய வழியில்தான் இறக்க வேண்டும் என்பது நம்முடைய தீராத ஆசையாக இருந்தால் கண்டிப்பாக நம்முடைய இறப்பும் அவ்வாறே அமையும்!உயர்ந்த உள்ளங்கள் சாதாரண மனிதர்கள் பார்க்கும்படி இருப்பதில்லை.அண்ணாந்து பார்க்கும்படி அவைவெகு உயரத்திலேயே காணப்படுகின்றன.

Saturday, November 8, 2008

மனைவி என்றால் ஸாலிஹான மனைவி

அழகான குழந்தை அது!நான் முழுக்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற தோற்றம்.அந்தக் குழந்தையை யார் பார்த்தாலும் உடனே எடுத்துக் கொஞ்சத் தொடங்கி விடுவார்கள்.ஒருநாள் திடீரென்று அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.குழந்தையின் தந்தையான அபுதல்ஹா வெளியே வேளை விஷயமாக போகக் கிளம்பினார்.குழந்தையின் தாய் உம்முஸூலைம் அக்கறையாக குழந்தையைப் பார்த்துக் கொண்டார்.வீடு திரும்பியவுடன் குழந்தையைப் பற்றித்தான் முதலில் விசாரித்தார்;.எப்படி இருக்கிறது? உடம்பு சரியாகிவிட்டதா?பரவாயில்லை. முன்பைவிட இப்போது நிம்மதியாக உள்ளான்! என்றார் அந்தத் தாய்!குழந்தையை கொண்டு வாருங்கள். பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்கின்றது!-என்றார் அந்த தந்தை.குழந்தை தூங்கிக் கொண்டுள்ளது. இப்போது தொந்தரவு தரவேண்டாம். நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தூங்குங்கள். காலையில் எழுந்ததும் பார்த்துக் கொள்ளலாம்! -என்று உம்முஸூலைம் கூறிவிட்டார்கள்.அபுதல்ஹாவும் தன்னுடைய மனைவியோடு தூங்கச் சென்றுவிட்டார்.காலையில் எழுந்ததும் உம்முஸூலைம் தன்னுடைய கணவரின் முகத்தைப் பார்த்தார்கள்.அமைதியாக ஒரு கேள்வியைக் கேட்டார்கள்:

உங்களிடம் யாரேனும் ஒருவர் ஒருபொருளைக் கொடுத்து வைத்திருந்து அதைத் தருமாறு கேட்டு வந்தால் என்ன செய்வீர்கள்?அவருடைய பொருளை அவர் கேட்டால் கொடுத்துத்தானே ஆகவேண்டும். உடனே நான் கொடுத்து விடுவேன்! என்றார் அபுதல்ஹா.அப்படியா! அப்படி என்றால் உங்களுக்கு குழந்தையைக் கொடுத்த அல்லாஹ் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டான்! -என்றார் உம்முஸூலைம் ரழியல்லாஹூ அன்ஹா.அபுதல்ஹா அமைதியாக நின்று கொண்டிருந்தார்.ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்? போய் கஃபன், தஃபன் வேலைகளைப் பாருங்கள்!ஒரு நிமிடம் விழிகளை உயர்த்தி அபுதல்ஹா தன்னுடைய மனைவியைப் பார்த்தார்.அதன்பின்பு குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானார்.அதன்பிறகு அண்ணாலாரிடம் சென்று நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கூறினார்.இரவில் ஒன்றாகத் தூங்கினீர்களா? என்று இறைத்தூதர் விசாரித்து.யா அல்லாஹ்! வளமான குழந்தைச் செல்வத்தை இவர்களுக்குக் கொடு!! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.அவ்வாறே ஒரு குழந்தை பிறந்தது.அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்கள்.மிகவும் அறிவுள்ள குழந்தையாக அல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற குழந்தையாக அது வளர்ந்தது.அபு தல்ஹாவுக்குக் கிடைத்த மனைவியும் ஸாலிஹான மனைவி! குழந்தையும் ஸாலியான குழந்தை!அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்ந்தால் எல்லா அருட்கொடைகளும் கிடைக்கும்!! நமக்கும்தான்!