அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Thursday, October 23, 2008

தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்!

‘அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ். அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்”

(பொருள் : அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். இறைவா நீ எல்லாக் குறைகளை விட்டும் பாதுகாப்பு பெற்றவன். உன்னிடமிருந்தே பாதுகாப்பு ஏற்படுகின்றது. மதிப்பும் மகத்துவமும் மிக்கவனே! நீ உயர்ந்து விட்டாய்!)

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின் கல் ஜத்”

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே! புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுப்தைக் கொடுப்பவர் எவருமில்லை. மதிப்புடைய எவரும் எந்தப் பயனும் அளிக்கமாட்டார். மதிப்பு உன்னிடமே உள்ளது)

“லாஹவ்ல லாகுவ்வத்த இல்லா பில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் ஃபழ்லு வலஹுல் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரீஹல் காஃபிரூன்”

(பொருள் : அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றைச் செய்யவோ தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருட்கொடை அவனுக்குரியது. பேருபகாரமும் அவனுக்குரியது. அழகிய புகழும் அவனுக்குரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. நிராகரிப்போர் விரும்பாவிட்டாலும் வணக்கங்களை அவனுக்கு மட்டுமே கலப்பற்ற முறையில் செய்வோம்)

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”

- இதை மஃரிபுக்குப் பிறகும், பஜ்ருக்குப் பிறகும் பத்து தடவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

(பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சி அதிகாரம் அவனுக்குரியதே! அவனுக்கே எல்லாப் புகழும். அவனே வாழ்வும் மரணமும் அளிக்கின்றான். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்)

பிறகு,

“சுப்ஹானல்லாஹ்” - 33 தடவைகள்

“அல்ஹம்துலில்லாஹ்” - 33 தடவைகள்

“அல்லாஹு அக்பர்” - 33 தடவைகள்

பிறகு,

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” - ஒரு தடவை ஓத வேண்டும்.

ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும்,

ஆயத்துல் குர்ஸி,

குல் ஹுவல்லாஹு அஹத்,

குல் அவூது பிரப்பில் ஃபலக்,

குல் அவூது பிரப்பின்னாஸ் ஓத வேண்டும்.

இந்த மூன்று சூராக்களையும் மஃரிபுக்குப் பிறகும், பஜ்ருக்குப் பிறகும் மூன்று தடவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

இஸ்லாத்தின் பர்வையில் மது அருந்துதல்!

மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன்)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: -
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள்: அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.

மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்: -
மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)

“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”

மது அருந்துபவர்களுக்கு மறுமையில் புகட்டப்படும் பானம்: -

“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்: -நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான்.
அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்

போதை தரும் அனைத்துமே மதுவைச் சேர்ந்ததாகும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

வெ்வேறு பெயர்களில் புழங்கும் மது வகைகள் பற்றிய எச்சரிக்கைகள்: -

‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம்: இப்னுமாஜா

‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

மது அருந்தியவனுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்த தண்டனை: -

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)

மது அருந்திய நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்! அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் மன்னிப்பான்: -

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்து விட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)
Thanks: http://suvanathendral.com

தூங்கும் போதும், தூக்கத்திலிருந்து எழும் போதும் கூற வேண்டியவை

ஹுதைபா (ரலி), அபூஃதர் ( ரலி ) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்கள், தான் படுக்கைக்கு வந்தால், ''பிஸ்மிக்கல்லாஹும்ம அமூது வஅஹ்யா'' என்று கூறுவார்கள். விழித்தால், ''அல்ஹம்துலில்லாஹில்லஃதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலய்ஹின் னுஷூர்'' என்று கூறுவார்கள். (புகாரி)

பொருள்: இறைவா! உன் பெயரால் தூங்குகிறேன், உன் பெயரால் விழிப்றேன்.

பொருள்: எங்களை உறங்கச் செய்தபின் எங்களை விழிக்கச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப்
புகழும். அவனிடமே மீண்டும் திரும்புதல் உண்டு. (ரியாளுஸ்ஸாலிஹீன்)

காலையிலும், மாலையும் அல்லாஹ்வை நினைவு கொள்வது!

அல்லாஹ் கூறுகிறான்: உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன்)

நபியே) சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! (அல்குர்ஆன்)

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் போற்றிப் புகழ்வீராக! (அல்குர்ஆன்)

(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ, அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காலையிலும், மாலையிலும், '' சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி '' என 100 தடவை ஒருவர் கூறினால், இது போன்று கூறியவர், அல்லது இதைவிட அதிகம் கூறியவர் தவிர, மறுமை நாளில் எவரும் இவர் கொண்டு வந்ததை விட மிகச் சிறந்ததை கொண்டு வரமாட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! இரவில் தேள் ஒன்று என்னைக் கொட்டி விட்டது'' என்று கூறினார். ''அறிந்து கொள்! மாலை நேரம் வந்ததும், ''அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின்ஷர்ரி மா கலக'' என்று கூறினால், அது உமக்கு இடையூறு தராது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)

பொருள்: அல்லாஹ்வின் படைப்புகளின் தீமைகளை விட்டும் முழுமையான அவனது சொற்களால் பாதுகாப்புத் தேடுகிறேன். (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1452)

அப்துல்லாஹ் இப்னு குபைப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: காலையிலும், மாலையிலும் ''குல்ஹுவல்லாஹுஅஹது'' அத்தியாயம், மற்றும் (குல்அஊது பிரப்பில் ஃபலக், குல்அஊது பிரப்பின்னாஸ் என்ற) இரண்டு முஅவ்விததய்ன் அத்தியாயத்தையும் மூன்று தடவை நீர் கூறுவீராக! அனைத்துப் பொருட்களின் தீமையை விட்டும் (உம்மை பாதுகாத்திட) உமக்கு அது போதும்'' என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்)