அழகான குழந்தை அது!நான் முழுக்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற தோற்றம்.அந்தக் குழந்தையை யார் பார்த்தாலும் உடனே எடுத்துக் கொஞ்சத் தொடங்கி விடுவார்கள்.ஒருநாள் திடீரென்று அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.குழந்தையின் தந்தையான அபுதல்ஹா வெளியே வேளை விஷயமாக போகக் கிளம்பினார்.குழந்தையின் தாய் உம்முஸூலைம் அக்கறையாக குழந்தையைப் பார்த்துக் கொண்டார்.வீடு திரும்பியவுடன் குழந்தையைப் பற்றித்தான் முதலில் விசாரித்தார்;.எப்படி இருக்கிறது? உடம்பு சரியாகிவிட்டதா?பரவாயில்லை. முன்பைவிட இப்போது நிம்மதியாக உள்ளான்! என்றார் அந்தத் தாய்!குழந்தையை கொண்டு வாருங்கள். பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்கின்றது!-என்றார் அந்த தந்தை.குழந்தை தூங்கிக் கொண்டுள்ளது. இப்போது தொந்தரவு தரவேண்டாம். நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தூங்குங்கள். காலையில் எழுந்ததும் பார்த்துக் கொள்ளலாம்! -என்று உம்முஸூலைம் கூறிவிட்டார்கள்.அபுதல்ஹாவும் தன்னுடைய மனைவியோடு தூங்கச் சென்றுவிட்டார்.காலையில் எழுந்ததும் உம்முஸூலைம் தன்னுடைய கணவரின் முகத்தைப் பார்த்தார்கள்.அமைதியாக ஒரு கேள்வியைக் கேட்டார்கள்:
உங்களிடம் யாரேனும் ஒருவர் ஒருபொருளைக் கொடுத்து வைத்திருந்து அதைத் தருமாறு கேட்டு வந்தால் என்ன செய்வீர்கள்?அவருடைய பொருளை அவர் கேட்டால் கொடுத்துத்தானே ஆகவேண்டும். உடனே நான் கொடுத்து விடுவேன்! என்றார் அபுதல்ஹா.அப்படியா! அப்படி என்றால் உங்களுக்கு குழந்தையைக் கொடுத்த அல்லாஹ் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டான்! -என்றார் உம்முஸூலைம் ரழியல்லாஹூ அன்ஹா.அபுதல்ஹா அமைதியாக நின்று கொண்டிருந்தார்.ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்? போய் கஃபன், தஃபன் வேலைகளைப் பாருங்கள்!ஒரு நிமிடம் விழிகளை உயர்த்தி அபுதல்ஹா தன்னுடைய மனைவியைப் பார்த்தார்.அதன்பின்பு குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானார்.அதன்பிறகு அண்ணாலாரிடம் சென்று நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கூறினார்.இரவில் ஒன்றாகத் தூங்கினீர்களா? என்று இறைத்தூதர் விசாரித்து.யா அல்லாஹ்! வளமான குழந்தைச் செல்வத்தை இவர்களுக்குக் கொடு!! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.அவ்வாறே ஒரு குழந்தை பிறந்தது.அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்கள்.மிகவும் அறிவுள்ள குழந்தையாக அல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற குழந்தையாக அது வளர்ந்தது.அபு தல்ஹாவுக்குக் கிடைத்த மனைவியும் ஸாலிஹான மனைவி! குழந்தையும் ஸாலியான குழந்தை!அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்ந்தால் எல்லா அருட்கொடைகளும் கிடைக்கும்!! நமக்கும்தான்!
Saturday, November 8, 2008
சபையில் நின்று சொல்!
அவருடைய பெயரும் அப்துல்லாஹ்தான்!அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ஆடுகளை மேய்ப்பது அவருடைய தொழில்.இறைவனைப் பற்றியும் இறைத்தூதரைப் பற்றியும் தெரிந்து கொண்டவுடன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்.ஆரம்ப காலத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதும் முஸ்லிமாக வாழ்வதும் இலேசான செயல்களாக இருக்கவில்லை.அடி, உதை, சித்திரவதை என்றுக் எல்லாவகையான தொல்லைகளுக்கும் ஆளாக வேண்டியிருந்தது.அல்குர்ஆனை ஓதவும் முடியாது: யாரிடமும் சொல்லவும் முடியாது.இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்களைத் தவிர யாரும் மக்கா நகர மக்களுக்கு முன்னால் தைரியமாக குர்ஆனை ஓத முடியாத நிலை!ஒருநாள் ஸஹாபாக்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.கஅபத்துல்லாஹ்வில் நின்று கொண்டு குர்ஆனை ஓத யாரேனும் தயாரா? என்றார் ஒருவர்.நான் தயார்! என்று உடனே ஒருவர் கையைத் தூக்கினார்.யாரென்று பார்த்தால் அப்துல்லாஹ்.நீங்கள் வேண்டாம் வேறு யாராவது முன்வரட்டும்! என்று தோழர்கள் மறுத்து விட்டார்கள்.ஏன்? என்ன காரணம்? அப்துல்லாஹ் விடவி;ல்லை.மக்களுக்கு முன்னால் நின்று குர்ஆனை ஓதினால் கண்டிப்பாக அவர்கள் அடிப்பார்கள்.அப்போது அவர்களிடம் இருந்து காப்பாற்ற சொந்தக்காரர்கள் இருக்க வேண்டும்.உங்களுக்கு அப்படிப்பட்ட சொந்தக்காரர்கள் யாரும் கிடையாது என்பதால் நீங்கள் வேண்டாம்! என்று காரணத்தைத் தோழர்கள் கூறினார்கள்.ஆனாலும் தன்னுடைய முடிவை விட்டும் நகரவில்லை அப்துல்லாஹ்.அடுத்தநாள் முற்பகலில் கஅபத்துல்லாஹ்வுக்கு சென்றார்.மக்காவின் முக்கிய பெருந்தலைகள் குறைஷித் தலைவர் என்று எல்லோருமே அங்கு உட்கார்ந்து இருந்தார்கள்.கஅபத்துல்லாஹ்வில் மகாமே இப்ராஹூம் என்ற ஒரு இடம் இருந்தது.இறைத்தூதர் இப்றாஹூம் நின்று தொழுத இடம் அது!அங்கே போய் அப்துல்லாஹ் நின்றுகொண்டார்.அர்ரஹ்மான்! அல்லமல் குர்ஆன்.ஃகலக்கல் இன்ஸான அல்லாமஹூல் பயான்.என்று அத்தியாயம் அர்ரஹ்மானை ஓதத் தொடங்கினார்.தீனிக்காக காத்திருந்த கழுதைப் புலிகளைப் போன்று அவர்மீது பாய்ந்தார்கள். காஃபிர்கள்.அடி அடியென்று அவரை அடித்துத் துவைத்தார்கள்.அவருடைய உடல் முழுக்க இரத்தக் களரியாக ஆகிப்போனது.மயக்கம் அடைந்து அவர்; கீழே விழுந்துவிட்டார்.ஸஹாபாக்கள் வந்து அவரைத் தூக்கிக் கொண்டு போனார்கள்.வேண்டாம் வேண்டாம் என்று நாங்கள் எவ்வளவு தூரம் சொன்னோம். எங்கள் பேச்சைக் கேட்டீர்களா?இப்படி உடம்பு முழுக்க புண்ணாக்கிகொண்டு வந்து நிற்கிறீர்களே!என்று மிகவும் வருத்தப்பட்டார்கள்.தைரியத்தையும் இறைநம்பிக்கை-ஈமானையும் எக்கச்சக்கமாய் மனதில் தேக்கி வைத்திருந்த அப்துல்லாஹ் கூறினார்:
இறைவனுடைய வார்த்தையைச் சொல்லும் விஷயத்தில் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்: நீங்கள் சரி என்று சொன்னால் நாளைக்கும் நான் போய் இறைவனுடைய வேதத்தை ஓதிக்காட்ட தயாராக உள்ளேன்.அவர்கள் என்னை அடித்தாலும் உதைத்தாலும் அதற்கு எல்லாம் பயப்பட மாட்டேன்!ஈமான் என்றால் இறைநம்பிக்கை என்றால் இப்படி இருக்க வேண்டும்!!
"அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, நற்செயல்களைச் செய்து, (மக்களுக்கு நடுவில் நின்று பகிரங்கமாக) அழைப்பவரின் சொல்லைவிட சிறந்ததாக யாருடைய சொல் இருக்கமுடியும்?" (அல்குர்ஆன் 41:33)

உயர்ந்த மினாராக்கள்
மினாராக்களைப் பார்த்திருக்கிறீர்;களா?பள்ளிவாசல்களில் இருக்குமே மினாராக்கள்.அவை எவ்வளவு உயரமாக இருக்கின்றன!காலை நேரத்தில் சூரியன் உதிக்கும்போது சூரியனுடைய ஒளிக்கதிர்கள் உயரமான மினாராக்களின் மீதும் தான் முதலில் படுகின்றன.சாதாரண கட்டிடங்களின் மீதும் வீடுகளின் மீதும் அதற்கு அப்புறம் தான் கதிர்கள் விழுகின்றன.இந்த உலகத்தில் ஓரிறைவனைப் பற்றிய உண்மையை மக்களிடம் சொல்ல ஆரம்பிக்கும் போது உயர்ந்த சிந்தனையைக் கொண்டவர்கள் தாம் முதன்முதலில் ஏற்றுக் கொள்கிறார்கள்.மதீனா நகரில் இஸ்லாமிய ஒளியை ஏற்றுவதற்காக முஸ்அப் ரழியல்லாஹூ அன்ஹூ முன்னதாகவே சென்றுவிட்டார்.அஸ்அத் என்பவர் வீட்டில் முஸ்அப் தங்கி இருந்தார்.முஸ்அப் வெகு அழகாக குர்ஆனை ஓதுவார்;: மிகவும் இனிமையாகப் பேசுவார்.மக்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் இஸ்லாமிய கருத்துகளை எடுத்து வைப்பார்.அல்குர்ஆனை அழகாக விளக்குவார் மெய்மறந்து மக்கள் கேட்பார்கள்.பக்கத்தில் ஒரு முஹல்லா இருக்கின்றது வாருங்கள் அங்கே சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுக்கும் இஸ்லாமைப பற்றி சொல்லிவரலாம் என்று ஒருநாள் அஸ்அத் அழைத்தார் இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.அங்கே ஒருதோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.அவர்கள் இருவரைச் சுற்றியும் மக்கள் கூடிவிட்டார்கள்.கூடியிருந்த அந்த மக்களுக்கு நல்லமுறையில் அழகாக இஸ்லாமை முஸ்அப் விளக்கிக் கொண்டிருந்தார்.
இந்த உலகை படைத்தது ஓரே இறைவன் தான்!இந்த ஒரே இறைவனை மட்டும் தான் வணங்கவேண்டும்!அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது!கற்சிலைகளையோ, மரங்களையோ, இறந்த மனிதர்களையோ வணங்குவது பெரும்பாவம்!என்றெல்லாம் முஸ்அப் விளக்கினார். இறைவனின் வேதத்தை ஓதிக்காட்டினார்.ஒரு மனிதருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. அவர் நேராக மதீனா மக்களின் தலைவர்களான சஅத் மற்றும் உஸைதிடம் சென்று இதைத் தடுத்து நிறுத்துமாறு கூறினார்.அதைக் கேட்ட சஅத், உஸைதிடம், என்ன நடக்கின்றது? என்று விசாரித்து வாருங்கள்! ஒருவேளை வெளியூர்க்காரரான அந்த மனிதர் நம்முடைய தெய்வங்களைப் பற்றி கேவலமாகப் பேசினால் அவரை எச்சரித்துவிட்டு வாருங்கள்! என்று சொல்லி அனுப்பினார்.மதீ னாவின் தலைவர்களுள் உஸைத் முக்கியமானவர்!உஸைத் என்றால் இளஞ்சிங்கம் என்று அர்த்தம்!!நிதாமான அடிமேல் அடிவைத்து வந்து கொண்டிருந்த உஸைதை தூரத்திலேயே அஸ்அத் பார்த்துவிட்டார். உஸைதை சுட்டிக்காட்டி முஸ்அப்பிடம் அவர் கூறினார்.இதோ வருகிறாரே, இவர்தான் உஸைத் பெருந்தன்மையதனவர்;: கண்ணியமானவர்!இவர் மட்டும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் இவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அதாவது மதீனாவில் பாதிப்பேர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்!ஆகையால் எப்படியாவது இவருக்கு இஸ்லாமைப் புரியவைத்து விடுங்கள்!!நேராக வந்த உஸைத் முஸ்அபுக்கு முன்னால் நின்றுகொண்டார்.
எங்களுடைய அனுமதி இல்லாமல் எங்கள் முஹல்லாவில் என்ன பிரச்சாரம் செய்கிறீர்கள்?எதற்காக எங்களுடைய தெய்வங்களை எல்லாம் குறை கூறுகிறீர்கள்?எங்கள் மக்களில் பலவீனமான மக்களை ஏன் மதம் மாற்றுகிறீர்கள்?என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார்;. மெதுவாக முஸ்அப் தம்முடைய தலையை தூக்கிப் பார்த்தார்.ஒரே இறைவனை மட்டும் வணங்கபவர்களுடைய முகங்கள் எப்போதும் ஜொலித்துக் கொண்டே இருக்கும் அல்லவா? முஸ்அப்புடைய முகம் தகதகவென்று ஜொலித்துக் கொண்டிருந்தது.எங்களுடைய தலைவரே! தயவுசெய்து நான் சொல்லும் நல்ல வார்த்தையைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்!!அது என்ன நல்ல வார்த்தை? என்று கேட்டார் உஸைத்!கொஞ்ச நேரம் உட்காந்து கேட்டுப் பாருங்கள்! உங்களுக்கு சரி என்று தோன்றினால் மேற்கொண்டு கேளுங்கள்! பிடிக்கவில்லை என்றால் நாங்கள் இந்த இடத்தை விட்டே சென்று விடுகிறோம்!! என்று அமைதியாகக் கூறினார் முஸ்அப்.அப்படியா! நீங்கள் சொல்வதும் நியாயமாகத் தான் படுகின்றது! என்று சொல்லிவிட்டு தன்னுடைய ஈட்டியை நிலத்தில் ஊன்றிவிட்டு கீழே உட்கார்ந்து கொண்டார்.இஸ்லாம் என்றால் என்ன? ஒரே இறைவனை மட்டும் ஏன் வணங்கவேண்டும்? இறைவனின் வேதம் அல்குர்ஆன் என்றால் என்ன? என்பதைப் பற்றி எல்லாம் முஸ்அப் விளக்கினார். அல்குர்ஆன் வசனங்களையும் ஓதிக்காட்டினார்.தூய்மையான உள்ளங்கள் சத்தியத்தை வெகுவிரைவில் அடையாளம் கண்டுகொள்கின்றன.அப்படியா! நீங்கள் சொல்வதுதான் உண்மை என்று எனக்குத் தோன்றுகின்றது. ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்றால் நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார் உஸைத்!நீங்கள் உங்கள் உடலைத் தூய்மை செய்துகொண்டு ஒரே இறைவனை மட்டும் வணங்குவேன்: முஹம்மதை இறைவனின் தூதராக ஏற்றுக் கொண்டு பின்பற்றுவேன் என்ற உறுதிமொழியை வாய்வார்த்தைகளாகக் கூறவேண்டும்! உஸைத், உடனே எழுந்து பக்கத்தில் உள்ள கிணற்றுக்குச் சென்றார். நன்றாக உடம்பைத் தேய்த்து கழுவினார்.அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்:வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூஎன்று கூறி ஒரே இறைவனை மட்டும் வணங்கும் தூய முஸ்லிம்களின் கூட்டத்தோடு தன்னையும் இணைத்துக் கொண்டார்.மதீனாவின் தானைத்தலைவர், சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்பு பெருமை பாராட்டாமல், கர்வம் கொள்ளாமல் உடனே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்.மிகப்பெரும் வில்வித்தை வீரர்: அதே சமயம் மிகவும் அமைதியானவர்!எங்காவது முஸ்லிம்களின் படை கிளம்பிச் சென்றால் ஜிஹாத் செய்ய உஸைதும் கிளம்பிச் செல்வார்: இல்லையென்றால் வீட்டில் தனியாக உட்காந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பார்.உஸைத் ரழியல்லலாஹூ அன்ஹூ!அவர் மக்களின் தலைவராக இருந்தும் இறைவனுக்காக எல்லாவற்றையும் உதறித்தள்ளினார். இறைவனுக்குப் பிரியமானவராக மாறினார். இறைவனும் அவரை மிகவும் நேசித்தான்.நாமும் அவரை நேசிப்போம்: அவரைப் போல மாற ஆசைப்படுகிறோம்!!

மலக்குகளும் வருவார்கள் கேட்க!!
குர்ஆனை ஓதுவது என்றால் உஸைத் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு மிகவும் ஆசை!
தனியாக உட்கார்ந்து ஓதிக்கொண்டே இருப்பார்.
அதுவும் இரவு நேரத்தில், மக்கள் எல்லாம் தூங்கிய பிறகு, நட்சத்திரங்கள் மட்டும் விழித்திருக்கும் நேரத்தில் தனியாக உட்கார்ந்து ஓதுவார்.
ஒருநாள் அதேபோல இரவுநேரம் ஊரெல்லாம் இருட்டு கவிந்திருந்தது.
தூங்க மனம் வரவில்லை உஸைதுக்கு!
இரவு நேரத்தில் இறை அடியார்கள் தூங்க நினைக்க மாட்டார்கள்.
இறைவனை வணங்க வேண்டும்: குர்ஆனை ஓதவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.
வீட்டின் கொல்லைப் புறத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். பக்கத்தில் தன்னுடைய மகனையும் படுக்கவைத்துக் கொண்டார்.
கொஞ்ச தூரம் தள்ளி அவருடைய குதிரை கட்டிப் போடப்பட்டிருந்தது. ஜிஹாதில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஆசையோடு வாங்கிய குதிரை அது!!
நிலவில்லாத வானம் அமைதியாக காணப்பட்டது.
விண்மீன்களும் மௌனமாக உட்கார்ந்தன.
முதல் அத்தியாயம் அல்பகராவை ஓதத் தொடங்கினார்.
குர்ஆனை ஓதுவதாக இருந்தால் இனிமையாக ஓதவேண்டும். என்று அல்லாஹவின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் சொல்லி உள்ளார்கள் அல்லவா?
அலிஃப், லாம், மீம்----- என்று ஓதிக் கொண்டே போனார்.
திடீரென்று அவருடைய குதிரை கனைத்தது:
துள்ளிக் குதித்தது!
கட்டியுள்ள கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிடும் போலத் தோன்றியது.
உஸைத் அதைப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஓதுவதை நிறுத்திவிட்டார்.குதிரையும் அமைதியாகிவிட்டது.
சத்தம் போடாமல் நின்று கொண்டது.
மீண்டும் உஸைத் குர்ஆனை ஓதத் தொடங்கினார்.
உலாயிக்க அலா ஹூதம் மிர்ரப்பிஹிம் வ உலாயிக்க ஹூமுல் முஃப்லிஹூன்....
குதிரை மீண்டும் கனைத்தது:
திமிறியது:
கால்களை உதைத்துக் கொண்டது.
உஸைத் பயந்து போனார்.
குதிரை பிய்த்துக் கொண்டுவந்து பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டுள்ள குழந்தையை உதைத்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்பட்டார்.
குர்ஆன் ஓதுவதை நிறுத்திவிட்டார்.
குதிரையும் அமைதியாகிவிட்டது.
குழந்தையை எடுப்பதற்காக குழந்தையின் பக்கத்தில் சென்றார்.
எழுந்துநின்று வானத்தைப் பார்;த்தவர் திகைப்படைந்து நின்றுவிட்டார். வானத்தில் எங்கும் மேகங்கள் நிறைந்து இருந்தன.
ஏதோ! ஒளியால் நிரம்பிய தொட்டியில் முக்கி எடுத்தவை போல அவை காணப்பட்டன.
என்னவென்று உற்றுப்பார்ப்பதற்குள் அவை மறைந்துவிட்டன.
காலையில் நடந்த விஷயங்களை எல்லாம் இறைத்தூதரிடம் சென்று கூறினார்
எல்லாவற்றையும் கேட்டபிறகு அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்:
நீங்கள் ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?
நீங்கள் ஓதுவதைக் கேட்க மலக்குகள் வந்து இருந்தார்கள்.
காலைவரை நீங்கள் ஓதி இருந்தால் மக்களும் அவர்களைப் பார்த்திருப்பார்கள்!!
எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் ஈடுபாட்டோடு செய்யவேண்டும்.
குர்ஆனை ஓதுவதாக இருந்தால் இறை அச்சத்தோடும் இக்ளாஸோடும் ஓதவேண்டும்.

சொத்தும் வேண்டாம்: சுகமும் வேண்டாம்!
ஸூஹைப் என்பது அவருடைய பெயர்.
அப்லா என்ற ஊரில் அவருடைய தந்தை பாரசீக நாட்டின் அதிகாரியாக இருந்தார்.
ஒருமுறை ரோம நாட்டினர் அந்த ஊரின் மீது படை எடுத்தார்கள்.
பாரசீக நாட்டுப் படையைத் தோற்கடித்து ஸூஹைபை கைதியாக பிடித்துக் கொண்டார்கள்.
மக்கா மாநகரில் அடிமையாக ஸூஹைபை விற்றுவிட்டார்கள்.
பின்னர் எப்படியோ ஒருவழியாக விடுதலையாகி அங்கேயே வாழ்ந்து வந்தார்.
தங்க நகைகள் செய்யும் தொழிலை செய்து வந்தார்.புகழ்பெற்ற ஆசாரியாக மாறிவிட்டார்.
ஏராளமான செல்வத்திற்கும் சொத்துக்களுக்கும் சொந்தக் காரராக மாறினார்.
இஸ்லாமியப் பிரச்சாரத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் ஆரம்பித்தபோது அதுதான் சத்தியம் என்பதை உணர்ந்து எற்றுக் கொண்டார்.முஸ்லிமாக மாறிவிட்டார்.
மக்கா நகரத்து மக்கள் முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடவில்லை.தொந்தரவுகளையும் தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
முஸ்லிம்களாக வாழவேண்டுமென்றால் அடி உதைகளை சகித்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற நிலையே நிலவியது.
எத்தனை நாளுக்குத்தான் கஷ்டங்களையும் அடி உதைகளையும் தாங்கிக் கொண்டு இருப்பது?
முஸ்லிம்கள் வசிப்பதற்காக வேறு இடங்களுக்கு செல்லத் தொடங்கினர்.
முதலில் அபிசீனியாவுக்கு சென்றார்கள்.பிறகு, மதீனாவுக்குக் கிளம்பினார்.
ஸூஹைபும் மதீனாவுக்குக் கிளம்பினார்.தன்னுடைய எல்லா சொத்துக்களையும் விற்று மூட்டையாகக் கட்டிக் கொண்டார்.
ஒட்டகத்தின் மீது சாமான் செட்டுகளை வைத்துக் கட்டிக் கொண்டு ஊரை விட்டுக் கிளம்பிவிட்டார்.
மக்கா நகரைத் தாண்டி மதீனா நகரை நோக்கி போகலானார்.
திடீரென்று குதிரைகளின் குளம்பு ஒலி கேட்டது.
அவரை நோக்கி வெகுதூரத்தில் பல குதிரைகள் வந்துகொண்டிருந்தன.
இதோ, குதிரைகள் அவரை நெருங்கி வந்து நின்றுகொண்டன.
எங்கே போகிறீர்கள் ஸூஹைப்? என்று வந்தவர்களில் ஒருவன் ஸூஹைபைப் பார்த்துக் கேட்டான்.
நானா? நான் மதீனாவுக்குப் போய்க் கொண்டுள்ளேன்!
நான் முஸ்லிமாக வாழ விரும்புகிறேன்.
என்னால் இங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை.
ஆகையால் தான் மதீனாவுக்குக் கிளம்பி விட்டேன்.
என்றார் ஸூஹைப்.
அப்படியா! அப்படியென்றால் இந்த சொத்துகளை எல்லாம் இங்கேயே இறக்கி வைத்துவிட்டுச் செல்!
-என்றான் இரண்டாவதாக இன்னொருவன்.
ஒன்றும் புரியாமல் அவனையே உற்றுப் பார்த்தார் ஸூஹைப்.
என்ன நான் சொல்வது உனக்கு விளங்கவில்லை?
நீ ஓர் அடிமையாக எங்கள் ஊருக்கு வந்தாய்.
இங்கேயே தொழிலைக் கற்றுக் கொண்டாய்.
ஏராளமான பணங்காசுகளை சம்பாதித்தாய்.
இப்போது எங்கள் சமயத்தை விட்டுவிட்டு வேறு ஒரு சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளாய்.
நீ சம்பாதித்த காசெல்லாம் எங்களுடையவை.
எங்களுக்கே சொந்தமானவை.
எங்கள் மதத்தைப் பின்பற்றுவதாக இருந்தால் இவ்வளவு சொத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு எங்களுடனேயே இருந்துவிடலாம்.
இல்லை, மதீனாவுக்குப் போவதாக இருந்தால் எங்கள் ஊரில் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போ!!
---என்றார்கள் வந்தவர்கள் அத்தனைபேரும்!!
ஒரு நிமிடம் நின்றார் ஸூஹைப்.
அவர்கள் சொன்னதை எல்லாம் மனதில் அசை போட்டுப் பார்த்தார்.
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவராகக் கூறினார்:
இதோ! இந்த இனைத்து சொத்துகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் ஒருக்காலும் என்னுடைய சமயத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக மாட்டேன்.
வெட்டுஒன்று துண்டுஇரண்டு என்பதைப்போல தெளிவாக தன்னுடைய கருத்தை கூறிவிட்டார்.
அவருடைய சொத்துகளை எல்லாம் அந்தக் காஃபிர்கள் பறித்துக் கொண்டார்கள்.
வெறுங்கையோடு ஸூஹைபை அனுப்பிவிட்டோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டடார்கள்.
ஆனால், உள்ளம் முழுக்க ஈமானை நிரப்பிக் கொண்டு ஸூஹைப் போனார்.
அவருடைய கைகள் காலியாக இருந்தன.
சொர்க்கமே அவருக்காக காத்துக் கொண்டு இருந்தது.
நான் சம்பாதித்த பொருள்: இதைக் காட்டிக் காப்பது என்னுடைய உரிமை என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை.
உரிமையை மீட்பதற்காக இஸ்லாமை இழந்துவிட அவர் தயாராக இல்லை.
இஸ்லாமுக்குப் பதிலாக இந்த உலகமே கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய?
அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக தங்களுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து விடுபவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்! (அல்குர்ஆன் 2:207)

அல்லாஹ்வோடு செய்துகொண்ட வாக்குறுதி
அனஸ் இப்னு நழ்ரு என்பது அவருடைய பெயர்.மிகவும் இறைநம்பிக்கை உள்ள நபித்தோழர்.இஸ்லாமை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக எதிரிகள் தொடுத்த முதல் போரான பத்ருப் போரில் அவர் கலந்து கொள்ளவேண்டும்.ஏதோ காரணத்திற்காக வெளியூர் சென்று இருந்தால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.அது அவருடைய மனதை மிகவும் வாட்டிக் கொண்டே இருந்தது.பத்ருப் போரில் கலந்து கொள்ளாததை மிகப்பெரிய இழப்பாக அவர் கருதினார்.எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய இறைநம்பிக்கை எப்படிப்பட்டது என்று கண்டிப்பாக நிரூபித்துக் காட்டுவேன் என்று அவர் அடிக்அடி கூறுவது வழக்கம்!இப்படிப்பட்ட நேரத்தில்தான் உஹதுப் போருக்கான அழைப்பு வந்தது.முஸ்லிம்கள் எல்லாம் கச்சை கட்டிக்கொண்டு போருக்குத் தயாரானார்கள்;.அனஸ் இப்னு நழ்ரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்.அவரும் ஸஅது இப்னு அபி வக்காஸூம் ஒன்றாகச் சேர்ந்து போர்க்களம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.சற்று தூரத்தில் எதிரிகளோடு முஸ்லிம்கள் மோதிக் கொண்டிருந்தார்கள்.நடந்து கொண்டிருந்த அனஸ் சட்டென்று நின்றார்.ஸஅத்! சொர்க்கத்தின் வாசம் வீசுகின்றதா?சொர்க்கத்தின் வாசத்தை நீ உணரவில்லையா?அனஸ் என்ன சொல்கிறார் என்று ஸஅதுக்கு உடனேபுரியவில்லை.அதோ ! உஹது மலைக்குப் பின்னால் இருந்து சொர்க்கத்தின் வாசம் வீசுவதை நான் உணர்கிறேன்! என்று அனஸ் கூறினார்.கூறியவர் அங்கேயே வெறுமனே நின்று கொண்டிருக்கவில்லை.தன்னுடைய வாளை உருவிக் கொண்டு போர்க்களத்தில் பாய்ந்துவிட்டார்.எதிரிகளோடு மிகவும் வீரதீரத்தோடு போரிட்டார்.இவரைப் போல இன்னொரு வீரர் யார் இருக்க முடியும்?என்று எல்லோரையும் கேட்க வைத்தார்.ஷஹீதாகத் தயாரானவர்தானே சொர்க்கத்திற்கு ஆசைப்பட முடியும்?ஷஹீத் ஆவது என்றால் சாதாரண விஷயமா? இன்றைக்கு யார்யாரையோ ஷஹீத் என்று சொல்லி விடுகிறார்கள்.அவர்கள் எல்லாம் உண்மையிலேயே ஷஹீத்கள்தானா என்பதை இறைவன் தான் அறிவான்.இஸ்லாமுக்காக வாழத் துணிந்தவன் தான் சாகவும் துணிவான்.அல்லாஹ் காட்டிய வழிமுறைகளின்படி வாழ்ந்து காட்டுபவனால்தான் அல்லாஹ் கூறிய முறைப்படி சாகவும் முடியும்.எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருந்த அனஸின் உடலில் ஏராளமான காயங்கள் ஏற்பட்டன.எதிரிப்படை வீரர்கள் பலபேரை அவர் வீழ்த்தினார். அவருடைய உடல் எங்கும் காயங்கள்: காயங்கள்!ஒன்றுஅல்ல, இரண்டுஅல்ல, என்பத்தி இரண்டு காயங்கள் அவருடைய உடலில் இருந்தன.அவருடைய உடல் தளர்ந்தது: உயிர்மூச்சு ஓய்ந்தது.இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன் போர் முடிந்துவிட்டது.இஸ்லாமுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த முஸ்லிம்கள் எல்லாம் ஷஹீதுகளாக கீழே வீழ்ந்து கிடக்கிறார்கள்;.தன்னுடைய சகோதரனுடைய நிலை என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்று கவலையோடு அனஸூடைய சகோதரி ருபய்யிஃ போர்க்களத்திற்கே வந்துவிட்டார்;.ஒவ்வொரு சடலமாக பார்த்துக் கொண்டே வருகிறார்.அனஸைக் காணவில்லை. மீண்டும் உன்னிப்பாக ஒவ்வொரு சடலத்தையும் பார்க்கிறார்.அனஸ் எங்கே விழுந்து கிடக்கிறார் என்றே அடையாளம் தெரியவில்லை.ஓரிடத்தில் உயிரற்ற உடல் ஒன்று கிடக்கின்றது.பார்த்தால் அனஸ் போலவே தெரிகின்றது.ஆனால், முகம் முழுக்க வெட்டுக் காயங்கள்.ஆள் யார் என்றே அடையாளம் சொல்ல முடியாது.அனஸ்தான் இது என்று அவருடைய உள் உணர்வு சொல்கின்றது.அந்த உடலின் கைகளைத் திருப்பிப் பார்த்தார்.அல்லாஹூஅக்பர்!! ஆம், அனஸேதான் இது!! அனஸ் ஷஹீதாகிவிட்டார்;.அனஸ் வெற்றி பெற்றுவிட்டார்.அனஸ்; அல்லாஹ்வோடு செய்த வாக்குறுதியை முழுமையாக்கி விட்டார்.அதுமட்டுமல்ல, வான்மறை குர்ஆனிலும் இடம் பெற்றுவி;ட்டார்.அல்லாஹூ அக்பர்.அல்லாஹ்விடம் தாங்கள் செய்துகொண்ட வாக்குறுதியை உண்மையாக்கி விட்டவர்கள் முஃமின்களில் இருக்கிறார்கள். ஒருசிலர் தங்களுடைய நேர்ச்சையை முழுமையாக்கி விட்டார்கள்: இன்னும் சிலரோ, அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33;:23)
சொர்க்கத்துக்குச் சொந்தக்காரர்
அப்துல்லாஹ் என்பது அவருடைய பெயர்.அவர் ஒரு யூதர். அதிலும் மார்க்க அறிஞர்.யூத சட்டதிட்டங்களையும் தவ்ராத் வேதத்தையும் கரைத்துக் குடித்தவர்.மதீனாவிற்கு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ¬_ அலைஹி வஸல்லிம் வந்தவுடன் ஊரெல்லாம இஸ்லாமைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.யூதர்களின் வேதமான தவ்ராத்திலும் இறுதித்தூதரைப் பற்றி கூறப்பட்டிருந்தது.அப்துல்லாஹ் ஒரு மார்க்க அறிஞர் என்பதால் ஏற்கனவே அதைப்பற்றி அறிந்திருந்தார்.சத்தியம் இதுதான் என்று தெரிந்த பிறகு அவர் சற்றும் தாமதிக்கவில்லை.உடனே, இறைத்தூதரைச் சந்தித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்;.ஒருநாள் இரவு அப்துல்லாஹ் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு கனவு!வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு நந்தவனம்.தென்றல் தாலாட்டில் பூக்கள் எல்லாம் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன.பச்சை நிறத்தை பனியில் நனைத்து காணும் இடமெல்லாம் தூவியது போன்ற தோற்றம்.பூமியில் உள்ள அழகை எல்லாம் ஒன்றாக ஓரிடத்தி;ல் கொட்டியது போலக் காட்சியளிக்கின்றது அந்த அற்புத நந்தவனம்.அழகு வனத்தின் நடுவே ஓர் இரும்பு தூண்.தூணி;ன் கீழ்ப்பகுதி பூமியில் நன்றாக ஊன்றப்பட்டு இருந்தது.மேற்பகுதியோ வானின் உச்சி வரைக்கும் நீண்டிருந்தது.அந்தத் தூணின் மேற்பகுதியில் பிடி ஒன்று காணப்பட்டது.பிடியைப் பிடித்து மேலே ஏறு! என்று யாரோ கூவினார்கள்.மேலே ஏறுவது ஒன்றும் இலேசான காரியமாக இல்லை.என்னால் முடியாதே!!என்றார் அப்துல்லாஹ்.அப்போது வேலைக்காரன் போல தோற்றம் அளித்த ஒரு மனிதன் பின்னால் முளைத்தான்.அப்துல்லாஹ்வை நெருங்கி அவருக்குப் பின்னால் நின்று கொண்டான்.அவருடைய ஆடையை பின்னால் பிடித்துத் தூக்கினான்.அந்த மனிதனின் தயவால் மேலே ஏற்றப்பட்ட அப்துல்லாஹ் எட்டி அந்தப் பிடியைப் பிடித்தார்ஒரு வழியாக அப்துல்லாஹ் மேலே ஏறிவிட்டார்.நன்றாகப் பிடித்துக் கொள்! விட்டுவிடாதே! என்று யாரோ கூறினார்கள்.நன்கு இறுக்கமாக அப்துல்லாஹ் அந்தப் பிடியைப் பற்றிக் கொண்டார்...................அவ்வளவு தான் கனவு கலைத்துவிட்டது.மெதுவாக அப்துல்லாஹ் விழித்து எழுந்தார்.என்ன கனவு கண்டோம்? அதற்கு என்ன பொருள்? எதுவுமே விளங்கவில்லை.இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லிம் அவர்களிடம் சென்று விளக்கத்தைகேட்டோம் என்று நினைத்துக் கொண்டார்.இறைத்தூதரின் அவைக்குச் சென்று கனவில் கண்ட எல்லாவற்றையும் எடுத்துக் கூறினார்.இறைவனின் தூதர் கூறினார்கள்.அந்த நந்தவனம் இஸ்லாம் ஆகும்!அந்தத் தூண் இஸ்லாமின் தூண் ஆகும்!!நம்பிக்கையின் பிடி என்று அல்லாஹ் கூறுகிறானே, அதுதான் அந்தப்பிடி! (காண்க-2:256)
நீங்கள் இறக்கும் வரைக்கும் இஸ்லாமின் மீதே நிலைத்து இருப்பீர்கள் என்பதுதான்இந்தக் கனவின் பொருளாகும்.அல்லாஹூ அக்பர்!சாகும் வரைக்கும் முஸ்லிமாக இருப்போமா என்பது யாருக்குமே தெரியாது.உண்மையான ஒவ்வொரு முஸ்லிமும் அதை எண்ணி பயந்துகொண்டே இருப்பான்.இறைத்தூதரின் வாயில் இருந்தே இத்தகைய ஓர் உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்ட அப்துல்லாஹ் எத்தகைய நல்ல மனிதராக இருந்திருப்பார்?இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அப்துல்லாஹ்வைப் பார்க்கும் போதெல்லாம் சொர்க்கவாசி வருகிறார்: இதோ சொர்க்கவாசி வருகிறார்! என்று கூறத் தொடங்கினார்..! உண்மைதானே?எவ்வளவு பெரிய பாக்கியம்!அல்லாஹ் உங்களையும் என்னையும் இத்தகைய மனிதர்களோடு சொர்க்கத்தில்ஒன்றாகச் சேர்த்து வைக்கவேண்டும்.

இறைத்தூதரின் பிரார்த்தனை வேண்டும்
சஅத் இப்னு உபாதா ஓர் உன்னதமான நபித்தோழர்.ரழியல்லாஹூ அன்ஹூஅன்சாரிகளின் தலைவர்களில் ஒருவர். அருமையான ஸஹாபி.ஒருமுறை இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்கள் சஅதைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்தார்கள்.வீட்டின் ஒரமாக நின்று கொண்டார்கள்.அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார்கள்.சஅத் உள்ளே உட்கார்ந்து இருந்தார்கள். ஆனால் மெதுவாக பதில் கூறினார்கள்.பதில் ஏதும் வராததால் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்கள் மீண்டும் ஒருமுறை ஸலாம் கூறினார்கள்.
சாதாரணமாக ஒருவரைப் பார்த்து நாம் ஸலாம் கூறினால் அவருக்காக நாம் துஆ செய்கிறோம் என்று தான் பொருள்!ஒரு முஸ்லிமுக்காக இன்னொரு முஸ்லிம் துஆ செய்தால் அல்லாஹ் அதனை உடனே ஏற்றுக் கொள்வான்.சாதாரண முஸ்லிமுடைய துஆவையே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்றால் அல்லாஹ்வுடைய தூதர் துஆ செய்தால் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பானா?கண்டிப்பாக ஏற்றுக் கொள்வான்.ஆகையால் இந்த முறையும் சஅத் பதில் சொல்லவில்லை.மெதுவாக பதில் கூறினார்கள். சஅதுடைய மகன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார்.ஷஷஅப்பா! ரசூலுல்லாஹ் ஸலாம் கூறுகிறார்கள். நீங்கள் பதில் சொல்லாமலேயே இருக்கிறீர்களே!-- என்று கேட்டார்.ஷஷஅமைதியாக இரு! இறைத்தூதர் ஸலாம் கூறினால் நமக்கு நலம் ஏற்படும். ---என்றால் சஅத்!மூன்றாவது முறையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் ஸலாம் கூறினார்கள்.மூன்றாவது முறையும் மெதுவாகவே சஅத் பதில் கூறினார்.மூன்று முறை ஸலாம் கூறியும் பதில் வராவிட்டால் நாம் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.மூன்றுமுறை கூப்பிட்டும் பதில் வராததால் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அங்கிருந்து கிளம்பத் தொடங்கினார்.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் போவதைக் கண்ட சஅத் ஓடோடிச் சென்று வஅலைக்கும் அஸ்ஸலாம் என்று சப்தமாகக் கூறினார்ஷஷஇறைத்தூதர் அவர்களே! தங்களுடைய துஆவை பெற்றுக் கொள்ளவேண்டும்.அதன்மூலமாக அல்லாஹ்வுடைய அருளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்;.என்பதற்காகத்தான் நான் சப்தமாக பதில் கூறாமல் மெதுவாக பதில் கூறினேன். ஆகையால் தவறாக எடுத்துக் கொள்ளமல் என் வீட்டுக்கு வாருங்கள்!!இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள்.இறைத்தூதரை சந்தோஷம் அடையச் செய்யமுடியும் என்றால் அதனைவிடப் பெரும் சந்தோஷம் என்னவாக இருக்கப் போகின்றது?

Subscribe to:
Posts (Atom)