அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Wednesday, August 5, 2009

குர்ஆனின் சிறப்புகள்:-

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரிச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளிசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் 'கசப்பானது' அல்லது 'அருவருப்பானது' அதன் வாடையும் வெறுப்பானது.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 69
புகாரி-பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5059

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள். 70
என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
புகாரி -பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5060


என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஒதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) நீங்கள் கருத்து வேறுபட்டால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள்.
என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இது, மற்ற அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
புகாரி -பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5061


அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
ஒருவர் (குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதை கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்றேன். (விவரத்தை விசாரித்தறிந்த) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்' என்று கூறிவிட்டு, (ஒவ்வொருவரையும் பார்த்து, 'அவ்வாறே) ஓதுங்கள்!' என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷ{அபா(ரஹ்) கூறினார்:
நபி(ஸல்) அவர்கள், '(வேற்றுமைகொள்ளாதீர்கள்!) ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (இப்படித்தான்) வேறுபட்டனர். அது அவர்களை அழித்துவிட்டது' என்று கூறினார்கள் எனவே பெரும்பாலும் கருதுகிறேன்.
புகாரி -பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5062