அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Tuesday, August 10, 2010

ரமலான் நோன்பு :-

ரமலான் நோன்பு
விசுவாசம் கொண்டோரே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டுள்ளது (அதனால்) நீங்கள் (உள்ள சுத்தி பெற்று) பயபக்தி உடையவர்களாகலாம். அல் குர்ஆன்  2:183
ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும்நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும், (சத்திய அசத்தியத்தைப்) பிரித்துக்காட்க்கூடியதாகவும் உள்ள இந்தகுர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவேஉங்களில் எவர் அம்மாதத்தை பொறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்றுவிடவும். எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால்மற்ற நாட்களில் (ஏற்கனவே விடுபட்ட நோன்பினை) எண்ணி (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். மேலும் அவன் நீங்கள் பூர்த்தி செய்வதற்காகவும். அல்லாஹ்வை உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதற்காக நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகாவுமே (இச்சலுகைகளை உங்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்). அல் குர்ஆன்  2:185  
...ஃபஜரு (அதிகாலை) நேரத்தில் (இரவு என்ற) கறுப்பு  நூலிலிருந்து (அதிகாலை என்ற) வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை உண்ணுங்கள்இன்னும் பருகுங்கள். பின்னர் இரவு (ஆரம்பமாகும்)வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்பை (நோற்றுப்) பூரணமாக்குங்கள்.... அல் குர்ஆன் 2:187  
சொர்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள் அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! நோன்பாளிகள் எங்கேஎன்று கேட்கப்படும் உடனே அவர்கள் எழுவார்கள் அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள் அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸஹ்ல்(ரலி) அவர்கள்,நூல்: புகாரி (1896)
ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இபூஹூரைரா (ரலி) அவர்கள்,  நூல்: புகாரி (1899)
நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள் (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்: உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) அவர்கள் நூல்: புகாரி (1900)
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என்று இறைத்தூர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் நூல்: புகாரி (1901)
நீங்கள் ஸஹர் செய்யுங்கள் நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் நூல் : புகாரி (1923)
நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் நூல் : புகாரி (1957)