அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Monday, November 3, 2008

ஃதிக்ரின் சிறப்பு, அதற்காக ஆர்வ மூட்டுதல்



அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!
( அல்குர்ஆன் : 62:10 )

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்!
( அல்குர்ஆன் : 33:41,42 )

அலீ ( ரலி ) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்கள் தொழுதால், கடைசி இருப்பில் அத்தஹிய்யாத் மற்றும் ஸலாம் கூறுவதற்கு இடையே கடைசி வார்த்தையாக, ''அல்லாஹும்மஹ்ஃபிர்லீ மாகத்தம்து வமா அக்கர்து, வமா அஸ்ரர்து வமா அஃலன்து. வமா அஸ்ரஃப்து, வமா அன்த அஷ்லமு பிஹி மின்னீ அன்தல் முகத்தமு, வஅன்தல் முஅக்கரு, லாயிலாஹ இல்லா அன்த'' என்று கூறுவார்கள். ( முஸ்லிம் )

பொருள்:
இறைவா! நான் முன் செய்தவற்றையும், பின் செய்தவற்றையும், ரகசியமாக செய்தவற்றையும், வெளிப்படையாக செய்தவற்றையும், வீண் விரயம் செய்தவற்றையும், என்னைப் பற்றி என்னைவிட நீ அறிந்துள்ளவற்றையும் எனக்கு நீ மன்னிப்பாயாக! நீயே முற்படுத்தி வைப்பவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1424 )


அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்கள் தன் ருகூஉவிலும், தன் ஸஜ்தாவிலும், ''சுப்ஹானக் கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக, அல்லாஹும்மஹ்ஃபிர்லீ'' என்று அதிகமாக கூறுபவர்களாக இருந்தனர். (புகாரி,முஸ்லிம்)

பொருள்: இறைவா! எங்கள் இரட்சகனே! உன்னைப் புகழ்ந்து தூய்மையானவன் என போற்றுகிறேன். இறைவா! என்னை மன்னிப்பாயாக!
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1425 )

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்கள் தன் ருகூஉ, ஸஜ்தாவில் ''சுப்பூஹுன், குத்தூசுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்'' என்று கூறுவார்கள். (முஸ்லிம்)

பொருள் : அல்லாஹ் தூய்மையானவன், பரிசுத்தமானவன். மேலும் வானவர்கள், ஜிப்ரீல் (அலை) ஆகியோரின் இறைவன். ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1426 )


இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

(தொழுகையின்) ருகூஉவில் இறைவனை கண்ணியப்படுத்துங்கள். ஸஜ்தாவில் துஆச் செய்வதில் ஈடுபடுங்கள். உங்களுக்கு துஆ ஏற்கப்படக் கூடும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1427 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஸஜ்தா செய்யக்கூடிய அடியான் தான், தன் இறைவனுக்கு மிக நெருக்கமானவனாக உள்ளான். எனவே (அதில்) துஆவை அதிகமாக்குங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1428 )


''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''.
(நூல்: புகாரி, முஸ்லிம்)

No comments: