அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Sunday, August 2, 2009

புறம்பேசித் திரிபவன் நிலை

முஸ்லிம்-அத்தியாயம்: 1, பாடம்: 1.45, ஹதீஸ் எண்: 151
‏ ‏و حَدَّثَنِي ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَهْدِيٌّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَاصِلٌ الْأَحْدَبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏
‏أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا يَنُمُّ الْحَدِيثَ فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ ‏ ‏نَمَّامٌ
"புறம்பேசித் திரிபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி).
குறிப்பு:
புறங்கூறித் திரியும் ஒருவரைப் பற்றித் தெரிவிக்கப் பட்டபோது, ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.

முஸ்லிம்-அத்தியாயம்: 1, பாடம்: 1.45, ஹதீஸ் எண்: 152
‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ الْحَارِثِ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَجُلٌ يَنْقُلُ الْحَدِيثَ إِلَى الْأَمِيرِ فَكُنَّا جُلُوسًا فِي الْمَسْجِدِ فَقَالَ الْقَوْمُ هَذَا مِمَّنْ يَنْقُلُ الْحَدِيثَ إِلَى الْأَمِيرِ قَالَ فَجَاءَ حَتَّى جَلَسَ إِلَيْنَا فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ ‏ ‏قَتَّاتٌ
மக்கள் பேசிக் கொள்வதை ஒருவர் ஆட்சியாளரிடம் (புறங்)கூறிக் கொண்டிருந்தார். நாங்கள் (ஒருநாள்) மஸ்ஜிதில் அமர்ந்திருந்தபோது மக்கள் (அவரைச் சுட்டிக் காட்டி), "இதோ! இவர் (நமக்கிடையில் நடக்கும்) உரையாடல்களை ஆட்சியாளரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பவர்களில் ஒருவர்" என்று கூறினர். அப்போது அதே மனிதர் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். அப்போது ஹுதைஃபா(ரலி) அவர்கள், "புறங்கூறுபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி).

முஸ்லிம்-அத்தியாயம்: 1, பாடம்: 1.45, ஹதீஸ் எண்: 153
‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ الْحَارِثِ ‏ ‏قَالَ ‏
‏كُنَّا جُلُوسًا مَعَ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏فِي الْمَسْجِدِ فَجَاءَ رَجُلٌ حَتَّى جَلَسَ إِلَيْنَا فَقِيلَ ‏ ‏لِحُذَيْفَةَ ‏ ‏إِنَّ هَذَا يَرْفَعُ إِلَى السُّلْطَانِ أَشْيَاءَ فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏إِرَادَةَ أَنْ يُسْمِعَهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ ‏ ‏قَتَّاتٌ
நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒருவர் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். "இதோ! இவர் (நாம் பேசிக்கொள்ளும்) விஷயங்களை ஆட்சியாளரிடம் போய்(ப் புறங்) கூறுகிறார்" என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, "புறங் கூறுபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று அம்மனிதர் செவியுறும் வண்ணம் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி) வழியாக ஹம்மாம் பின் அல்-ஹாரிஸ் (ரஹ்).

No comments: