அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Wednesday, August 25, 2010

நபிமொழி : 056

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 

அன்புச்சகோதரர்களுக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

 

நபிமொழி : 056      - NABIMOZI – 056

 

அபூமுஹம்மத் என்ற ஜுபைர் இப்னு முத்இம்;(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''உறவைத் துண்டிப்பவன், சொர்க்கத்தில் நுழையமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 339)

 

அபூஈஸா என்ற முஅய்ரா இப்னு ஷுஃபா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''தாய்மார்களை நோவினை செய்வதையும், தனது கடமைகளை செய்யாதிருப்பதையும், தனக்கு உரிமை இல்லாதைத் தேடுவதையும், பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்து உள்ளான். மேலும், ''இப்படி இவர் கூறினார். இவ்வாறு கூறப்பட்டது'' எனக் கூறுவதையும், அதிகக் கேள்வி கேட்பதையும் பொருளை வீணாக்குவதையும் அல்லாஹ் வெறுக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 340)

 

இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு மனிதன், தன் தந்தையின் நன்பரை ஆதரிப்பது நன்மைகளில் மிகப் பெரும் நன்மையாகும்'' என, நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 341)

 

அபூமூஸா அஷ்அரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நல்லவனுடன் உட்கார்ந்திருப்பவன், கெட்டவனுடன் உட்கார்ந்திருப்பவன் இந்த இருவருக்கும் உதாரணம் என்பது, கஸ்தூரி வைத்திருப்பவன் மற்றும் இரும்பு உலையில் ஊதுபவன் போன்றதாகும். கஸ்தூரியை வைத்திருப்பவன், உமக்கு அதைத்தருவான். அல்லது அவனிடம் நீ நல்ல வாடையைப் பெற்றுக் கொள்ளலாம். இரும்பு உலையை ஊதுபவன், உன் ஆடையை கரித்து விடுவான் அல்லது அவனிடம் கெட்ட வாடையை நீ அடையலாம் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 363)

 

 

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)

--
yours lovingly
muji..
http://mujira3.googlepages.com

No comments: