அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Wednesday, October 29, 2008

அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்

இல்லை என்று சொல்லாத உயர்ந்த உள்ளம்!


அஸ்மா(ரலி) அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: "செலவிடு. எண்ணி எண்ணிக் கொடுக்காதே. இறைவனும் உனக்கு எண்ணிக்கொடுப்பான். கொடுக்காமல் மறுத்து விடாதே. இறைவனும் உனக்குக் கொடுக்கமறுத்து விடுவான். உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடு."நூல்: புகாரி. முஸ்லிம்


அண்ணல் நபிகளார்(ஸல்) நவின்றார்கள்:


"மனிதர்களுடன் கருணையுடன் நடந்துக் கொள்ளாதவன் மீது இறைவனும்கருணை காட்ட மாட்டான்." அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி)நூல்: புஹாரி, முஸ்லிம்.விளக்கம்:இதே பொருளில் அநேக நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "யார் கருணை காட்டுவதில்லையோ, அவர் மீது இறைவனும் கருணைகாட்ட மாட்டான்." (முஸ்லிம்) "மக்கள் மீது கருணை காட்டாதவர்கள் மீதுஇறைவனும் கருணை காட்ட மாட்டான்." (புஹாரி)இதே போல இன்னொரு நபிமொழியில். "நம்மில் சிறியவர்கள் மீது அன்புசெலுத்தாதவனும் பெரியவர்களின் உரிமைகளை புரிந்து நம்மைச் சேர்ந்தவர்அல்ல" (அபூ தாவூத்) என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.அஹ்மத், திர்மிதி ஆகிய நபிமொழித் தொகுப்பு நூல்களில் இடம் பெற்றுள்ள ஒருநபிமொழியில், "பெரியவர்களை மதிக்காதவனும் சிறியவர்களிடம் இரக்கத்துடன்நடந்துக் கொள்ளாதவனும் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கிற கடமையைநிறைவேற்றாதவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன் (நம்முடையவழிமுறையின்படி நடப்பவன் அல்லன்.)" எனச் சொல்லப்பட்டுள்ளது.இந்த நபிமொழிகளிலிருந்து ஒரு உண்மை எடுப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது: "இறைவனின் அடியார்களுடன் கனிவுடனும் அருளுடனும் நாம் நடந்துக்கொண்டால் மட்டுமே இறைவனின் உதவிக்கும் அவனுடைய இரக்கத்துக்கும்கருணைக்கும் தகுதியானவர்களாக ஆவோம்."நாம் இவ்வாறு அழகிய இளகிய நடத்தையை மேற்கொள்வோமேயானால்இறைவனின் கருணை நமக்குக் கிடைத்து விட்டது என்று பொருள் ஆகும். நம்மிடம் அந்த இளகிய நடத்தையே இல்லையெனில் இறைவனின் உதவிகள், அவனுடைய கருணை, கிருபை ஆகியவற்றை விட்டு நம்மை நாமே வெகு தூரம்விலக்கிக் கொள்ள விரும்புகிறவர்கள் நாம் என்று பொருள் ஆகி விடும்.நபிமொழியில் 'அன்னாஸ்' (மனிதர்கள்) என்கிற சொல் கையாளப்பட்டுள்ளது. மனிதர்களில் நம்பிக்கையாளர்கள், தீயவர்கள், நிராகரிப்பாளர்கள் எல்லோருமேஅடங்கி விடுவார்கள்.எல்லா மனிதர்களும் நம்முடைய கிருபைக்கும் கருணைக்கும்உரித்தானவர்களே!இன்னும் சொல்லப் போனால் இறைநிராகரிப்பாளர்கள்குறித்து நமக்குள் சற்று அதிகமாகவே அன்பும் கருணையும் தவிப்பும் இருக்கவேண்டும். இறைநிராகரிப்புப் போக்கிலிருந்து இவர்கள் விலக வேண்டாமா? இறைவேதனையிலிருந்து இவர்கள் தப்ப வேண்டாமா? என்கிற கவலைஅதிகமாக இருக்க வேண்டும்.

No comments: