அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Wednesday, October 29, 2008

அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு

அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு -
1. இரண்டு பழக்கங்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்தவை. அவை என்னவெனில் இறைநம்பிக்கையும் முஸ்லிம்களின் நலன் நாடுதலும் ஆகும்.
2. இரண்டு பழக்கங்கள் எல்லாவற்றையும் விட மோசமானவை. அவை என்னவெனில் இறைவனோடு மற்றவர்களை இணையாக்குவதும் முஸ்லிம்களுக்கு கேடு விளைவிப்பதும் அவர்களுடன் மோசமாக நடந்துகொள்வதும் ஆகும்.

"சந்தேகப்படுவதிலிருந்து விலகி இருங்கள். ஏனெனில் சந்தேகத்துடன்சொல்லப்படும் விஷயம் மிகப் பெரும் பொய் ஆகும்.

பிறருடைய நன்மை, தீமைபற்றி அறிய வேண்டும் என்று செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றித் துருவித் துருவி ஆராயாதீர்கள்.

மற்றவர்களை விட அதிகமானவிலையைச் சொல்லாதீர்கள்.
பரஸ்பரம் பொறாமை கொள்ளாதீர்கள். ஒருவர் மீதுஒருவர் வெறுப்பு கொள்ளாதீர்கள்.

பரஸ்பரம் பகைமை பாராட்டாதீர்கள்.

தொடர்பைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள்.

இறைவனின் நல்லடியார்களாக, ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்."


அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

அம்ருபின் அபச (ரலி) அறிவிக்கின்றார்கள். நான் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களிடம் சென்று "இறைத்தூதரே! 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டேன். அண்ணல் நபிகளார் (ஸல்) விடையளித்தார்கள் : "பொறுமையும் வள்ளல்குணமும்"

No comments: