' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.(புகாரி பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5641)
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4 என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5645 )
ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை. இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.( புகாரி பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5646 )
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். 'தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (இறைத்தூதர் அவர்களே!), தங்களுக்கு இதனால் இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள்.(புகாரி பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5647 )
Sunday, July 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment