சஅத் இப்னு உபாதா ஓர் உன்னதமான நபித்தோழர்.ரழியல்லாஹூ அன்ஹூஅன்சாரிகளின் தலைவர்களில் ஒருவர். அருமையான ஸஹாபி.ஒருமுறை இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்கள் சஅதைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்தார்கள்.வீட்டின் ஒரமாக நின்று கொண்டார்கள்.அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார்கள்.சஅத் உள்ளே உட்கார்ந்து இருந்தார்கள். ஆனால் மெதுவாக பதில் கூறினார்கள்.பதில் ஏதும் வராததால் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்கள் மீண்டும் ஒருமுறை ஸலாம் கூறினார்கள்.
சாதாரணமாக ஒருவரைப் பார்த்து நாம் ஸலாம் கூறினால் அவருக்காக நாம் துஆ செய்கிறோம் என்று தான் பொருள்!ஒரு முஸ்லிமுக்காக இன்னொரு முஸ்லிம் துஆ செய்தால் அல்லாஹ் அதனை உடனே ஏற்றுக் கொள்வான்.சாதாரண முஸ்லிமுடைய துஆவையே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்றால் அல்லாஹ்வுடைய தூதர் துஆ செய்தால் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பானா?கண்டிப்பாக ஏற்றுக் கொள்வான்.ஆகையால் இந்த முறையும் சஅத் பதில் சொல்லவில்லை.மெதுவாக பதில் கூறினார்கள். சஅதுடைய மகன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார்.ஷஷஅப்பா! ரசூலுல்லாஹ் ஸலாம் கூறுகிறார்கள். நீங்கள் பதில் சொல்லாமலேயே இருக்கிறீர்களே!-- என்று கேட்டார்.ஷஷஅமைதியாக இரு! இறைத்தூதர் ஸலாம் கூறினால் நமக்கு நலம் ஏற்படும். ---என்றால் சஅத்!மூன்றாவது முறையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் ஸலாம் கூறினார்கள்.மூன்றாவது முறையும் மெதுவாகவே சஅத் பதில் கூறினார்.மூன்று முறை ஸலாம் கூறியும் பதில் வராவிட்டால் நாம் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.மூன்றுமுறை கூப்பிட்டும் பதில் வராததால் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அங்கிருந்து கிளம்பத் தொடங்கினார்.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் போவதைக் கண்ட சஅத் ஓடோடிச் சென்று வஅலைக்கும் அஸ்ஸலாம் என்று சப்தமாகக் கூறினார்ஷஷஇறைத்தூதர் அவர்களே! தங்களுடைய துஆவை பெற்றுக் கொள்ளவேண்டும்.அதன்மூலமாக அல்லாஹ்வுடைய அருளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்;.என்பதற்காகத்தான் நான் சப்தமாக பதில் கூறாமல் மெதுவாக பதில் கூறினேன். ஆகையால் தவறாக எடுத்துக் கொள்ளமல் என் வீட்டுக்கு வாருங்கள்!!இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள்.இறைத்தூதரை சந்தோஷம் அடையச் செய்யமுடியும் என்றால் அதனைவிடப் பெரும் சந்தோஷம் என்னவாக இருக்கப் போகின்றது?
Saturday, November 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment